மகளையே திருமணம் செய்துகொண்டாரா சிவன்?.. இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தி பேச்சு - எம்எல்ஏ பகதூர் சிங் சர்ச்சை!
இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 27) அன்று, ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்ஏ ஃபதே பகதூர் சிங்கின் பேசிய வீடியோ கிளிப் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் அவர் இந்து தெய்வமான துர்க்கை அம்மனை பற்றி அவதூறாக பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
சிவபெருமான், துர்க்கை அம்மனை உருவாக்கினார் என்றால், சிவன் தன் மகளையே மனத்துக்கொண்டாரா என்று ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியுள்ளார். இந்துக் கடவுள்களுக்கு எதிராக, சிங்கின் இந்த இழிவான கருத்துக்கள் மக்களை கொதிப்படைய செய்துள்ளது. மேலும் ஆங்கிலேயர்கள் அட்டூழியங்களைச் செய்யும் போது இந்த தெய்வம் எங்கே போனது என்று கூறியுள்ளார் அவர்.
பீகாரில் உள்ள ரோஹ்தாஸ் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. நவராத்திரி நாட்களில் துர்காவை வழிபடும் நிகழ்ச்சி ஒன்றில் டேஹ்ரி எம்எல்ஏ ஃபதே பகதூர் சிங் கலந்து கொண்டார். அங்கு அவர் துர்க்கை உள்ளிட்ட பிற கடவுள்களைப் பற்றி ஆட்சேபனைக்குரிய கேள்விகளை எழுப்பினார், அது பின் கடுமையான சர்ச்சைக்கு வழிவகுத்தது.
ஃபதே பகதூர் சிங், “துர்கா ஒரு கற்பனைக் கதையின் கற்பனை பாத்திரம். நான் அதை நம்பியிருப்பேன், ஆனால் அதற்கு எதிரான ஆதாரம் என்னிடம் உள்ளது. துர்காஜி இருந்திருந்தால், அல்லது நம் நாட்டில் மனுவாதிகளின் கூற்றுப்படி 33 கோடி தெய்வங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்த போது இந்தியா அடிமைப்பட்டு இருந்தது, அவர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திய போது, அங்கு 30 கோடி இந்தியர்கள் இருந்தனர். மேலும் இந்தியர்களுக்கு 33 கோடி தெய்வங்களும் இருந்தன என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.
அக்டோபர் 31இல் ஆஜராக முடியாது; வேற வேலை இருக்கு: மஹுவா மொய்த்ரா!
மேலும், “மகிஷாசுரனின் படையில் இருந்த கோடிக்கணக்கான வீரர்களுக்கு எதிராக துர்க்கை போரிட்டு மகிஷாசுரனைக் கொன்றதாக எழுதிய மனுவாதிகளிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன், ஒருசில ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக்குவதில் மும்முரமாக இருந்தபோது துர்கா என்ன செய்து கொண்டிருந்தார்? அவளுக்குப் பல்லாயிரக்கணக்கான கைகள் இருந்தன, அந்த நேரத்தில் இன்னும் அதிகமான ஆயுதங்கள் இருந்தன. அப்படியென்றால், அந்த நேரத்தில் துர்கா மாதா ஏன் பிரிட்டிஷ் அரசைக் கொல்லவில்லை? என்று பேசியுள்ளார்.
இதுமட்டுமின்றி, RJD எம்எல்ஏ ஃபதே பகதூர் சிங், துர்கா தேவியின் பிறப்பு மற்றும் துர்காவின் வண்ணம் (சிந்தூர்) குறித்து கேள்விகளை எழுப்பினார். மகிஷாசுரனை எந்த மண்ணில் துர்க்கை கொன்றார் என்ற கேள்வியையும் மனுவாதிகள் தெளிவாக சொல்ல வேண்டும் என்றார் அவர். அனைத்து தேவர்களும் ஒன்று கூடினர், ஆனால் அவர்கள் மகிஷாசுரனைக் கொல்லவில்லை, ஆனால் அவர்கள் துர்க்கை மூலம் அவரைக் கொன்றனர் என்று கூறப்படுகிறது. மகிஷாசுரன் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சக்திவாய்ந்த அரசன், எங்கள் ஹீரோ வில்லனாக மாற்றப்பட்டார். என் முன்னோர்கள் அனைவரையும் நான் ஹீரோக்களாகவே கருதுகிறேன்” என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் “மனுவாதிகள், துர்க்கை எல்லாக் கடவுள்களாலும் படைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். எனவே, துர்க்கை அனைத்து கடவுள்களின் மகள். மறுபுறம், துர்க்கை சிவபெருமானின் மனைவி என்று கூறுகிறார்கள். ஆனால் துர்க்கையை உருவாக்கிய கடவுள்களில் சிவனும் ஒருவர். எனவே, சிவன் தன் மகள் துர்காவை மணந்தார். ஏன் துர்க்கை மகிஷாசுரனுடன் இரவில் மட்டும் போரிட்டாள்? அவள் ஏன் இரவில் அங்கு செல்ல வேண்டும்?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளார் அவர்.
எம்எல்ஏவின் பேச்சை கண்டித்து ரோஹ்தாசில் இன்று வியாழக்கிழமை கடும் போராட்டம் நடைபெற்றது. ஆர்ஜேடி கட்சிக்கு எதிராக இந்து அமைப்புகள் வீதியில் இறங்கி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, டெஹ்ரியில் உள்ள பாஜக மற்றும் பஜ்ரங்தள தொண்டர்கள் ஆத்திரமடைந்து எம்எல்ஏவின் உருவ பொம்மையை எரித்தனர்.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் விஜய் குமார் சின்ஹா கூறுகையில், “ஆர்ஜேடி கட்சியினர் தொடர்ந்து சனாதன தர்மத்தை அவமதிக்கிறார்கள், அவர்களின் தலைவர்கள் சில சமயங்களில் கடவுள் இருப்பதைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். அன்னையின் குழந்தைகளைக் காயப்படுத்த என்ன மாதிரியான மொழியைப் பயன்படுத்துகிறார்கள்? இவர்களுக்கு சனாதன் மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை லாலு யாதவும், தேஜஸ்வி யாதவும் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரியங்கா காந்திக்கு ஸ்ரீ தேவநாராயண் கோயில் பூசாரி கண்டனம்!