Asianet News TamilAsianet News Tamil

பிரியங்கா காந்திக்கு ஸ்ரீ தேவநாராயண் கோயில் பூசாரி கண்டனம்!

பிரதமர் மோடி கோயில் நன்கொடை குறித்த பிரியங்கா காந்தியின் கருத்துக்கு அக்கோயில்  பூசாரி கண்டனம் தெரிவித்துள்ளார்

Bhilwara Devnarayan temple pujari condemns priyanka gandhi on pm modi donation smp
Author
First Published Oct 27, 2023, 6:21 PM IST

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா ஸ்ரீ தேவநாராயண் கோயிலுக்கு பிரதமர் மோடி அளித்த நன்கொடை குறித்து பிரியங்கா காந்தி கூறியதில் உண்மை இல்லை என அக்கோயில் பூசாரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தேவநாராயணன் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ தேவநாராயண் 1111ஆவது அவதார தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் கலந்து கொண்டார். அப்போது அக்கோயிலுக்கு அவர் காணிக்கை அளித்ததை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 20ஆம் தேதி அம்மாநிலத்தின் தௌசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசுகையில், “ஸ்ரீ தேவநாராயண் கோயிலுக்கு பிரதமர் அளித்த காணிக்கையை கோயில் நிர்வாகத்தினர் 6 மாதத்திற்கு பிறகு திறந்து பார்த்தனர். அதில் வெறும் ரூ.21 மட்டுமே இருந்தது. இது உண்மையா பொய்யா என தெரியவில்லை. அந்த காணிக்கை போலத்தான் பாஜகவினர் வாக்குறுதிகள் அளிக்கின்றனர். தேர்தலுக்கு பிறகு, அவை ஒன்று மில்லாமல் போய் விடுகிறது.” என விமர்சித்தார்.

தெரு நாய்களை விட அதிகமாக சுற்றுகிறார்கள்: அமலாக்கத்துறையை வறுத்தெடுத்த ராஜஸ்தான் முதல்வர்!

பிரதமர் மோடி கோயில் காணிக்கை குறித்த பிரியங்கா காந்தியின் கருத்து கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அவருக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தனிப்பட்ட மத வழிபாட்டு முறை குறித்து, பிரியங்கா காந்தி பொய்ப் பிரசாரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் தொடர்பாக வருகிற 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி, தேர்தல் ஆணையம் பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

 

இந்த நிலையில், ஸ்ரீ தேவநாராயண் கோயிலுக்கு பிரதமர் மோடி அளித்த நன்கொடை குறித்து பிரியங்கா காந்தி கூறியதில் உண்மை இல்லை என அக்கோயில் பூசாரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தேவநாராயணன் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோயில் கமிட்டி நன்கொடைகளை ஒருபோதும் வெளியிடுவதில்லை எனவும், இப்படிப்பட்ட சூழலில், பிரதமர் அளித்த காணிக்கை உறையில் ரூ.21 நன்கொடை இருந்ததாக கூறுவது முற்றிலும் தவறானது எனவும் பூசாரி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios