கடன் சுமையில் சிக்கித்தவித்த குடும்பம்.. தக்காளி செய்த அற்புதம் - 45 நாட்களில் 4 கோடி சம்பாதித்த விவசாயி!
கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை உச்சத்தை தொட்டு வரும் வேதனை செய்திகள் வெளியாகி வரும் அதே நேரத்தில், பாடுபட்டு உழைத்த விவசாயிகள் பலர் தற்பொழுது இந்த தக்காளியால் கோடீஸ்வரர்களாக மாறியுள்ள கதைகளை கேட்கும் பொழுது, அது சற்று ஆறுதலாக தான் இருக்கிறது என்றே கூறலாம்.

ஏற்கனவே Puneவை சேர்ந்த பல விவசாயிகள் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்த முரளி என்ற விவசாயி வெறும் 45 நாட்களில், தக்காளியை விற்றதன் மூலம் சுமார் 4 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளார்.
ஒரு காலத்தில் தனது வீட்டில் கஷ்டப்பட்டு உழைத்து வைத்த 50 ஆயிரம் ரூபாயை, அலமாரியில் பூட்டி வைத்து அதை தினமும் பூசை செய்து வந்துள்ளார் முரளி. இந்நிலையில் இந்த வருடம் தக்காளியின் விலை ஏற்றத்தால் சுமார் ஒன்றரை மாதம் பாடுபட்ட அவருக்கு 4 கோடி கிடைத்துள்ளது.
இதே நிலை நீடித்தால் தமிழக அமைச்சரவையை புழல் சிறையில் தான் நடத்த வேண்டும் - அதிமுக விமர்சனம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் முரளிக்கு என்று சொந்தமாக 12 ஏக்கர் நிலம் உள்ளது, இந்நிலையில் அண்மையில் தான் கூடுதலாக 10 ஏக்கர் நிலத்தை அவர் வாங்கியுள்ளார். கடந்த ஆண்டு இந்த 22 ஏக்கர் நிலத்தில் போட்ட பல பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் முரளியின் குடும்பம் மிகப்பெரிய கடன் சூழ்நிலையில் சிக்கியது.
ஒரு விவசாயியாக, தனது நிலத்தில் பயிரிட தொடர்ச்சியாக கடன்களை பெற்று பெற்று இறுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கடனில் சிக்கி தவித்து வந்துள்ளார் முரளி. இந்நிலையில் தான் முரளிக்கு ஒரு நல்ல காலம் பிறந்துள்ளது. தொடர்ச்சியாக தக்காளியின் விலை ஏற்றத்தின் காரணமாக, கடந்த சில மாதங்களாக அவர் கடுமையாக உழைத்து சுமார் 4 கோடி ரூபாயை அவர் சேர்த்துள்ளார்.
தனது கடன்களை அடைத்தது போக தற்பொழுது இன்ஜினியரிங் பயின்று வரும் தனது மகனுக்கும், மருத்துவம் பயின்று வரும் தனது மகளுக்கும் சந்தோஷமாக கல்லூரி செலவுகளை செய்து வருவதாக முரளி கூறியுள்ளார். இந்நிலையில் தன்னிடம் மீதமுள்ள பணத்தை கொண்டு அதை மீண்டும் விவசாயத்தில் முதலீடு செய்ய விருப்பதாக அவர் கூறியுள்ளார். விவசாயத்தை நம்பி போராடும் ஒவ்வொரு விவசாயியும் நிச்சயம் வெற்றி பெறுவான் என்று அவர் கூறியுள்ளார்.