"சும்மா Flight மாதிரில இருக்கு".. வந்தே பாரத் ரயிலின் ஓட்டுநர் கேபின் இப்படிதான் இருக்கும் - வைரலாகும் வீடியோ!
இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றான வந்தே பாரத் ரயிலின் ஓட்டுநர் இருக்கை, அதாவது Loco Pilot கேபின் எப்படி இருக்கும் என்று தெரியுமா?

ஒரு சில வளர்ந்த நாடுகளில் உள்ள புல்லட் ரயில்களுக்கு இணையாக புகழ்பெற்று வருகின்றது இந்தியாவின் "வந்தே பாரத்" ரயில்கள் என்றால் அது மிகையல்ல. உலக அளவில் ரயில் பெட்டிகளை மிகச்சிறந்த முறையில் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஒன்று தான் சென்னை ICF. இங்கிருந்துதான் தற்போது வந்தே பாரத் ரயில்கள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர், கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் பொதுமக்களிடமிருந்து மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் முதலில் 2019ம் ஆண்டு புதுடெல்லி - வாரணாசி இடையே பிப்ரவரி மாதம் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கியது.
இதையும் படியுங்கள் : அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி மனைவி ஆஜர்!
தற்பொழுது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தினமும் 23 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் சென்னை எழும்பூர் முதல் திருநெல்வேலி இடையேயும் மற்றும் சென்னை சென்ட்ரல் முதல் திருப்பதி இடையேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்றும், வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சுமார் 70-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பல்வேறு புகழ்ச்சிகளுக்கு உள்ளாகி வரும் இந்த "வந்தே பாரத்" ரயிலின் ஓட்டுநர் கேபின் எப்படி இருக்கும் என்பது குறித்து பலருக்கு சந்தேகம் இருந்திருக்கும்.
அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு youtuber தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கோவாவில் இயக்கப்பட்டு வரும் "வந்தே பாரத்" ரயிலின் ஓட்டுநர் கேபினை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு விமானத்தைப் போல அதன் கேபின் இருப்பதைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வருகிறது!