அமிர்தபால் சிங்.. தற்கொலை செய்துகொண்ட 19 வயது அக்னிவீரர்.. இறப்பு குறித்து பரவிய வதந்தி - வெளியான உண்மை!

பஞ்சாபின் மான்சாவைச் சேர்ந்த அக்னிவீரர் அம்ரித்பால் சிங், கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர், பூஞ்ச் ​​பகுதியில் தனது கடமைகளை செய்ய துவங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 11ம் தேதி அன்று அவர் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை நாடுமுழுவதும் ஏற்படுத்தியது. 

Fake news spreading regarding the death of agniveer Amritpal Singh what really happened ans

வெறும் 19 வயதே நிரம்பிய அவரது இறுதிச் சடங்குகள் நேற்று அக்டோபர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அவரது சொந்த கிராமத்தில் நடத்தப்பட்டன. அம்ரித்பால் சிங் கடந்த செப்டம்பர் 20 அன்று பூஞ்ச் ​​செக்டரில் உள்ள ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ் பட்டாலியனில் சேர்க்கப்பட்டார். மேலும் கடந்த அக்டோபர் 11ம் தேதி அம்ரித்பால் சிங், தலையில் குண்டு காயத்துடன் இறந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த இளம் வீரரின் தந்தை, செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், தனது மகனுடன் அவர் இறந்த அதே நாள் காலையில் பேசியதாகவும், அப்போது அவர் நன்றாக இருப்பதாக கூறியதாகவும், அந்த தந்தை கூறியுள்ளார். ஆனால் அன்று இரவு தான் அம்ரித்பால் சிங் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவரது இடத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார். மகனின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

ரூ.26 ஆயிரம் கடனுக்காக 100 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற கூலி தொழிலாளி

அவர் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவர், 19 வயதான அம்ரித்பால் சிங்கின் உடலை வீட்டிற்கு கொண்டு வர, ராணுவ ஆம்புலன்ஸ் கூட வழங்கப்படவில்லை என்று கூறி மோடி அரசின் மீது குற்றம்சாட்டினார். இந்நிலையில் உண்மையில் அந்த அக்னிவீரர் மரணத்தில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இப்பொது வெளியாகியுள்ளது.

என்ன நடந்தது?

அக்னிவீர் அம்ரித்பால் சிங், கடந்த 11 அக்டோபர் 2023 அன்று, ரஜோரி செக்டரில், காவலாளி பணியில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். அதன் பிறகு இறந்தவர்களின் சடலம், அக்னிவீரர் பிரிவு மூலம் சிவில் வாடகை ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. இராணுவ ஏற்பாடுகளின் கீழ் ஒரு ஜூனியர் கமிஷன் அதிகாரி மற்றும் நான்கு அதிகாரிகள் அவருடைய இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த வீரர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பதால், அவருடைய பிரேதத்துடன் வந்த அதிகாரிகள் சிவில் உடையில் இருந்தனர். மற்றும் அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததன் காரணமாக, இறந்தவருக்கு ராணுவ மரியாதை மற்றும் இராணுவ இறுதிச் சடங்கு எதுவும் வழங்கப்படவில்லை. இது தான் நடிப்பில் உள்ள கொள்கையும் ஆகும். 

விதிகள் மற்றும் இதற்கு முன்பு நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இறந்தவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது என்று அக்னிவீர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆன்லைனில் பழகிய பெண்.. நேரில் சந்திக்க ஆசைப்பட்ட இளைஞர்.. அப்புறம் நடந்தது தான் சிறப்பான சம்பவம் - என்ன ஆச்சு?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios