Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைனில் பழகிய பெண்.. நேரில் சந்திக்க ஆசைப்பட்ட இளைஞர்.. அப்புறம் நடந்தது தான் சிறப்பான சம்பவம் - என்ன ஆச்சு?

தலைநகர் டெல்லியில் உள்ள குரு கிராம் என்ற இடத்தில் வசித்து வரும் ஒரு இளைஞர், Bumble என்ற ஆன்லைன் செயலி மூலம் ஒரு பெண்ணை சந்தித்து, அவரோடு நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து பேசியபோது அவருக்கு நடந்த கொடுமை குறித்து இந்த பதிவில் காணலாம்.

Gurugram man lost money and jewel after having a dating with a girl he met in online app ans
Author
First Published Oct 14, 2023, 6:25 PM IST | Last Updated Oct 14, 2023, 6:25 PM IST

பாதிக்கப்பட்ட ரோஹித் குப்தா என்ற அந்த நபர், பம்பிள் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம், பயல் என்று அழைக்கப்படும் சாக்ஷி என்ற அந்த பெண்ணை சந்தித்ததாக தனது அதிகாரப்பூர்வ புகாரில் தெரிவித்துள்ளார். அந்த பெண் டெல்லியை சேர்ந்தவர் என்றும், தற்போது தனது அத்தையுடன் குருகிராமில் வசித்து வருவதாகவும் அந்த பெண் கூறியதாக குப்தா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

மேலும் குப்தா அளித்த தகவலில் "அக்டோபர் 1 ஆம் தேதி, அந்த பெண் என்னை தொடர்புகொண்டு, என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். இரவு 10 மணியளவில், செக்டார் 47-ல் உள்ள டாக்யார்ட் பார் அருகில் இருந்து அவரை அழைத்துச் செல்ல என்னை அந்த பெண் அழைத்தார். நான் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு, அருகில் உள்ள கடையில் இருந்து மதுவை வாங்கிக்கொண்டு என் வீட்டிற்கு சென்றேன்" என்று குப்தா தனது புகாரில் கூறியுள்ளார்.

விண்ணை முட்டும் உள்நாட்டு விமானக் கட்டணம்! சென்னை திரும்ப டிக்கெட் கிடைப்பதில் சிக்கல்!

வீட்டிற்கு வந்ததும், அந்தப் பெண் தன்னை ஐஸ் கொண்டு வர சமையலறைக்குச் செல்லும்படி கூறினார், அப்போது அவர் அருகில் இல்லாத நேரத்தில், ​​​​அவரது மது பானத்தில் எதோ ஒரு போதைப்பொருளைக் கலந்து கொடுத்துள்ளார். "அந்த மருந்தின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது என்றும், அவர் அக்டோபர் 3 ஆம் தேதி காலை தான் எழுந்ததாகவும் கூறியுள்ளார். எழுந்தபோது தன் தங்கச் சங்கிலி, ஐபோன் 14 ப்ரோ, 10,000 ரூபாய் ரொக்கம் மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் போன்றவற்றைக் காணவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது வாங்கி கணக்கில் இருந்து 1.78 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதையும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தற்போது அந்த பெண்ணை தேடும் பணி நடந்து வருகின்றது.

அப்பவே சொன்னோம்... கர்நாடகாவை ஏ.டி.எம். போல பயன்படுத்தும் காங்கிரஸ்: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios