நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சி தொடங்கும் முன்பாகவே வந்துவிட்டார். பிரதமர் மோடி வந்தபோது அனைத்து பா.ஜனதா எம்.பி.க்களும், முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் மேஜைத் தட்டி அவரை வரவேற்றனர்.

கசப்பை உணர்ந்து பேச்சு

பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்து பிரதமர் மோடி வௌியே புறப்பட்டபோது, முதல்வர் மம்தா பானர்ஜியே சந்தித்தார். உடனே இருவரும் ஒருவொருக்கு ஒருவர் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். சிறிது நேரம் பழைய கச்சப்பான விஷயங்களை மறந்து பேசினர்

பீகார் மகளின் பக்கத்தில் நிதிஷ்

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தவருமான,  பீகார் மகள் என்று அழைக்கப்பட்டவருமான காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார் அருகே மாநில முதல்வர்நிதிஷ் குமார் அமர்ந்திருந்தார். இந்த தேர்தலில் மீரா குமாருக்கு ஆதரவு தெரிவிக்காமல், ராம்நாத்துக்கு நிதிஷ் ஆதரவு தெரிவித்தார். இருவரும் அருகே அமர்ந்தபோதிலும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை.

சஸ்பெண்ட் எம்.பி.களுடன் ராகுல்

நாடாளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.களுடன்பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கடைபகுதி இருக்கையில் காங்கிரஸ் துணைத்தலைவர்ராகுல் காந்தி அமர்ந்திருந்தார்.

எம்.பி.க்களுடன் அமர்ந்த மம்தா.

பெரும்பாலான மாநில முதல்வர்களுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுஇருந்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி, தனது கட்சி எம்.பி.களுடன்அமர்ந்திரந்தார். அப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தபோது,திரிணாமுல் எம்.பி. டேரீக் ஓ பிரையன் எழுந்து சென்று அவரை வரவேற்று, மம்தா பக்கத்தில் அமரவைத்தார்.

தாமதமாக வந்த முன்னாள் ஜனாதிபதி

பிரதமர் மோடி முன்னாள் பிரதமர் எச்.டி.தேவே கவுடா, முன்னாள் ஜனாதிபதி பிரதீபாபாட்டீல் அருகே அமர்ந்திருந்தார். இதில் ராம்நாத் கோவித் பதவிப்பிரமாணம் ஏற்றபின், தாமதமாக பிரதீபா பாட்டீல் வந்தார். இதனால், அவரை எம்.பி.க்கள்அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

மூத்தவர்களுடன் அமித் ஷா

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அருகே கட்சியின் தேசியத் தலைவர அமித் ஷா அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே அமர்ந்திருந்த வெங்கையா நாயுடு பேசிக்கொண்டே இருந்தார்.

சோனியாவும், வெங்கையாவும்...

காங்கிரஸ் தலைவர்சோனியா காந்திக்கு பின்புறம் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு அமர்ந்திருந்தார். இருவரும் பேசிக்கொண்டனர்.

மனைவிக்கு முதல்வரிசை

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் மனைவி சவிதா கோவிந்த், முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சமாஜ்வாதி தலைவர்முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதீஸ் சந்திர மிஸ்ரா ஆகியோர் முதல்வரிசையில் அமர்ந்தனர்.

நீதிபதிகளுக்கு 2-வது வரிசை

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2, 3-வது வரிசையில் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்தபின், அவர்களுடன் பிரதமர் மோடி சிறிதுநேரம் உரையாற்றி சென்றார்.

முப்படைகளின் தளபதிகள்

ராணுவத்தின் தளபதி ஜெனரல் பிபின்ராவத், விமானப்படை தளபதி பிரேந்தர் சிங்தனோனா, கப்பற்படை தளபதி சுனில் லம்பாம் ஆகிோயருக்கு நடுவரிசையில் இருக்கை அமர்த்தப்பட்டு இருந்தது.

ஆளுநர்கள்..

மஹாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா, எஸ்.சி. ஜமீர்(ஒடிசா), பி. சதாசிவம்(கேரளா), கேசரி நாத் திரிபாதி(மேற்கு வங்காளம்),நஜ்மா ஹெப்துல்லா(மணிப்பூர்), பன்பாரிலால் புரோஹித்(அசாம்), பி.பி.ஆச்சார்யா(நாகாலாந்து), கிரண்பேடி(புதுச்சேரி) ஆகியோர் வந்திருந்தனர்.

முதல்வர்கள்...

எடப்பாடி பழனிச்சாமி(தமிழகம்), தேவேந்திர பட்நாவிஸ்(மஹாராஷ்டிரா), வசுந்தரா ராஜே(ராஜஸ்தான்), சர்பானந்த சோனாவால்(அசாம்), கே.சந்திரசேகர்ராவ்(தெலங்கானா), விஜய் ரூபானி(குஜராத்), சிவராஜ் சவுகான்(மத்தியப் பிரதேசம்), ராமன் சிங்(சட்டீஸ்கர்), மனோகர் லால் கட்டார்(ஹரியானா), பி.கே.சாம்லிங்(சிக்கிம்), பீமா காண்டு(அருணாச்சலப்பிரதேசம்), என் பிரேன்சிங்(மணிப்பூர்)

ஆசி வாங்கிய எம்.பி.க்கள்...

பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தபின், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம்ஏராளமான எம்.பி.க்கள் அவரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்.

‘ஜெய்  ராம்’ முழக்கம்

பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி முடிந்து வெளியேறியபோது சில எம்.பி.க்கள் ‘ஜெய்  ராம்’, ‘பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட்டுச் சென்றனர்.