Asianet News TamilAsianet News Tamil

பொது இடங்களில் தொழுகை செய்தால் சட்டப்படி குற்றம்… உ.பி. அரசு புதிய சட்டம்...!

உத்தரபிரதேசம் மாநிலம், நொய்டாவில் பூங்கா உள்பட பொது இடங்களில் தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Ensure Muslim employees dont offer prayers in parks..UP
Author
Uttar Pradesh, First Published Dec 26, 2018, 4:49 PM IST

உத்தரபிரதேசம் மாநிலம், நொய்டாவில் பூங்கா உள்பட பொது இடங்களில் தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மசூதி, தர்காக்கள் தவிர பொது இடங்களில் தடையை மீறி தொழுகை நடத்தினால், அதற்கு அந்த நிறுவனமே பொறுப்பு எனவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Ensure Muslim employees dont offer prayers in parks..UP

தங்களுக்கு பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கும்படி சிலர் கலெக்டரிடம்கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதற்கு அனுமதிக்க கலெக்டர் மறுப்பு தெரிவித்துள்ளார். தொழுகை மட்டுமின்றி வேறு எந்த மத நடவடிக்கைகளை பொது இடங்களில் நடத்த அனுமதி கிடையாது. அதனால் அப்பகுதி நிறுவனங்களில் வேலை செய்யும் இஸ்லாமியர்கள், அங்கு தொழுகை நடத்த அனுமதி கேட்டால் வழங்கக் கூடாது. அது சட்டப்படி குற்றமாகும் என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Ensure Muslim employees dont offer prayers in parks..UP

நொய்டாவில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் இஸ்லாமியர்கள் அங்குள்ள ஒரு பொது இடத்தில் கூடி தொழுகை நடத்துவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios