2 பல்புகள் மட்டுமே உள்ள வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம்.. அதிர்ச்சியில் உறைந்த 90 வயது மூதாட்டி..
கர்நாடகாவில், 2 பல்புகள் மட்டுமே கொண்ட சிறிய வீட்டில் வசிக்கும் 90 வயது மூதாட்டிக்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள பாக்யா நகரில் கிரிஜாம்மா என்ற 90 வயது மூதாட்டி வசித்து வருகிறார். தனது மகனுடன் மிகச்சிறிய வீட்டில் வசித்து வந்த பெண்ணுக்கு பாக்ய ஜோதி திட்டத்தின் கீழ் அரசு மின் இணைப்பு வழங்கியுள்ளது. அவரின் வீட்டில் 2 பல்புகள் மட்டுமே உள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் 18 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் அவருக்கு மாதந்தோறும் ரூ.70 முதல் ரூ.80 வரை மின்கட்டணம் வந்துள்ளது. இந்த சூழலில் அவருக்கு ரூ.1,03, 315 மின்சாரம் கட்டணம் வந்துள்ளது.
இதுகுறித்து பேசிய அந்த மூதாட்டி “ எனது மகன் தினக்கூலி தொழிலாளி, நாங்கள் இருவர் மட்டுமே சிறிய வீட்டில் வசிக்கிறோம். கட்டணத்தை எப்படி செலுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை, இதிலிருந்து என்னை மீட்டெடுக்க நீங்கள்(பத்திரிகையாளர்கள்) எனக்கு உதவ வேண்டும்.” என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் மாணவர்களின் புத்தகப் பை எடை எவ்வளவு இருக்க வேண்டும்? கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் கர்நாடக அரசு மின்வாரியத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு விரைந்து சென்று மீட்டரை சரிபார்த்தனர். செயல் பொறியாளர் ராஜேஷ் இதுகுறித்து பேசிய போது, 2021ம் ஆண்டு முதல் மீட்டர் ரீடிங்கில் ஏற்பட்ட பிரச்னையால், அந்த மூதாட்டிக்கு கூடுதல் மின் கட்டணம் வந்துள்ளது. மேலும், அந்த பெண்ணிடம், பில் கட்ட தேவையில்லை, அதிகாரிகள் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
மேலும் “பாக்ய ஜோதி திட்டத்தின் கீழ் வீட்டுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளோம். மீட்டரில் உள்ள பிரச்னையை தீர்த்து திருத்தப்பட்ட பில் கொடுப்போம். மின்சார துறை ஊழியர்கள்ஊழியர்கள் தவறால் அந்த மூதாட்டிக்கு கூட்டணம் கூடுதலாக வந்துள்ளது. தவறு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார். எனினும் அதிகாரிகள் செய்த தவறால், அதிர்ச்சியில் ஆழ்ந்த அந்த மூதாட்டிக்கும், அவரது மகனுக்கும் அதிகாரிகள் அளித்த இந்த உறுதி சற்று நிம்மதியை அளித்துள்ளது.
இனிமெட்ரோ ரயிலில் Loud Speaker-ல் பாட்டு கேட்க முடியாது.. மெட்ரோ நிர்வாகம் அதிரடி அறிவிப்பு..