மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு ஒருதலை பட்சமாக  நடந்துகொள்கிறது.  தமிழக அரசை கேட்காமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என எடப்பாடி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கியமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், கர்நாடக அரசு உச்சநீதி மன்ற தீர்ப்பை மீறி செயல்படுகிறத. இதனால் காவேரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர். காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா வைத்த கோரிக்கையை பரிசீலிக்க கூடாது. 

மேலும் சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிக்க வேண்டாம் என நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் அதுமட்டுமல்ல மேகத்தாது அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதலை கேட்கவில்லை, இதில் பிரதமர் உடனடியோயாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமிய கூறியுள்ளார்.