அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான மற்றொரு குடியிருப்பில் ரூ.15 கோடி பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி!!
பெல்கோரியாவில் உள்ள ரத்தாலாவில் வங்காள அமைச்சர் பிரதா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான மற்றொரு குடியிருப்பில் இருந்து ரூ.15 கோடி ரொக்கம் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பெல்கோரியாவில் உள்ள ரத்தாலாவில் வங்காள அமைச்சர் பிரதா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான மற்றொரு குடியிருப்பில் இருந்து ரூ.15 கோடி ரொக்கம் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 20 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த தொகை இயந்திரங்கள் மூலம் எண்ணுவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வங்கி அதிகாரிகளின் உதவியை நாடினர். மேலும் அர்பிதா முகர்ஜியின் வளாகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் பயன்பாடுகள் குறித்து கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மேற்கு வங்க ஆட்சி மீது கை வைப்பீங்க.? வங்கம் வந்தால் வங்கப் புலிகள் உங்களை வேட்டையாடும்.! மம்தா எச்சரிக்கை!
கிளப் டவுன் ஹைட்ஸ் குடியிருப்பில் 3 கிலோவுக்கும் அதிகமான தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. 76 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத தங்க ஆபரணங்கள் மற்றும் 21.9 கோடி ரூபாயை அமலாக்கத்துறை கைப்பற்றியதைத் தொடர்ந்து அவரது டோலிகஞ்ச் குடியிருப்பில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார். முகர்ஜி மற்றும் சாட்டர்ஜி இருவரும் தற்போது சால்ட் லேக்கில் உள்ள CGO வளாகத்தில் அமலாக்கத்துறை காவலில் உள்ளனர். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் அவர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று சோதனை நடைபெற்றது.
இதையும் படிங்க: குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும்… அமைச்சர் கைது விவகாரத்தில் மம்தா கருத்து!!
இந்த நிலையில் பெல்கோரியாவில் உள்ள ரத்தாலாவில் வங்காள அமைச்சர் பிரதா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான மற்றொரு குடியிருப்பில் இருந்து மேலும் ரூ.15 கோடி ரொக்கம் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுக்குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், சாட்டர்ஜி மற்றும் முகர்ஜியின் நெருங்கிய உதவியாளருக்குச் சொந்தமான அடுக்கமாடி குடியிருப்பின் முதல் மாடியில் சோதனை செய்யப்பட்டது. மேலும் அவரது குடியிருப்பில் உள்ள சில லாக்கர்களை உடைக்க பூட்டு தொழிலாளி ஒருவரை அழைத்து வரப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட சோதனையில், மேலும் ரூ.15 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. சாட்டர்ஜியுடனான அவரது 11 ஆண்டுகால தொடர்பு பற்றிய ஆவணங்களை நாங்கள் வைத்தோம் என்று தெரிவித்துள்ளனர்.