Asianet News TamilAsianet News Tamil

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும்… அமைச்சர் கைது விவகாரத்தில் மம்தா கருத்து!!

வேலை வாய்ப்பு மோசடியில் அமைச்சர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் யாரேனும் தவறு செய்திருந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.   

If found guilty he must be punished says mamata regarding ministers arrest issue
Author
West Bengal, First Published Jul 25, 2022, 6:49 PM IST

வேலை வாய்ப்பு மோசடியில் அமைச்சர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் யாரேனும் தவறு செய்திருந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். முன்னதாக மேற்கு வங்கத் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான சட்டர்ஜி, மாநிலக் கல்வி அமைச்சராக இருந்தபோது நடந்ததாகக் கூறப்படும் பள்ளிச் சேவை ஆணையத்தின் (SSC) ஆட்சேர்ப்பு இயக்கங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: 3 முறை போன் செய்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி; மம்தா பானர்ஜியின் பதில் இதுதான்!!

If found guilty he must be punished says mamata regarding ministers arrest issue

இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய மம்தா பானர்ஜி, நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. உண்மை மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவருவதற்கு ஒரு காலக்கெடு இருக்க வேண்டும். யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் அல்லது அவள் தண்டிக்கப்பட வேண்டும். கட்சியும் நடவடிக்கை எடுக்கும். ஆனால், எனக்கு எதிரான தவறான பிரச்சாரத்தை நான் கண்டிக்கிறேன். அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ. 22 கோடி ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் பேசும் வீடியோவை பாஜக பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: நாய்க்கு தனி ஏசி ஃபிளாட்; நடிகை அர்பிதாவுக்கு தனி ஃபிளாட்; மேற்குவங்க அமைச்சரின் லீலைகள் அம்பலம்!!

If found guilty he must be punished says mamata regarding ministers arrest issue

ஆனால் திரிணாமுல் காங்கிரசுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தப் பெண்ணுடன் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கும் அவளைத் தெரியாது. நான் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன், யாராவது என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டால் அது என் தவறா? மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரஸை உடைக்க முடியும் என்று பாஜக நினைத்தால் அது தவறு. இது (விசாரணை) என் கட்சியையும் என்னையும் இழிவுபடுத்துவதற்கான ஒரு பொறியா என்பதைப் பார்க்க வேண்டும். நான் ஊழலை ஆதரிக்கவோ அல்லது அதை வளர்க்க அனுமதிக்கவோ இல்லை என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios