நாய்க்கு தனி ஏசி ஃபிளாட்; நடிகை அர்பிதாவுக்கு தனி ஃபிளாட்; மேற்குவங்க அமைச்சரின் லீலைகள் அம்பலம்!!
கைது செய்யப்பட்டு இருக்கும் மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தனது வளர்ப்பு நாய்களுக்கு என்று தனியாக நவநாகரீக ஏசி ஃபிளாட் வைத்து இருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் வெளியாகியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டு இருக்கும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தனது வளர்ப்பு நாய்களுக்கு என்று தனியாக நவநாகரீக ஏசி ஃபிளாட் வைத்து இருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் ஊழல் முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்குவங்க மாநிலத்தின் டைமண்ட் சிட்டியில் மட்டும் மூன்று ஃபிளாட்டுகள் வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றில் ஒரு ஃபிளாட் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. நாய்கள் என்றால் பார்த்தாவுக்கு மிகவும் பிடிக்குமாம். இந்த ஏசி ஃபிளாட்டில்தான் நாய்கள் மட்டுமே வளர்க்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக, அமைச்சர் பார்த்தாவுக்கு நெருக்கமானவர், உதவியாளர் என்று அறியப்படுபவர் நடிகை அர்பிதா முகர்ஜி. இவரது ஃபிளாட்டில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு 20 கோடி ரூபாய் ரொக்கம், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கட்டுக் கட்டாக பணம் குமிக்கப்பட்ட வீடியோ, வைரலானது.
இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அமைச்சர் பார்த்தா சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். இவர் பல ஃபிளாட்டுகள் வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் வைத்திருந்த ஃபிளாட்டுகளில் ஒன்றை நடிகை அர்பிதாவுக்கு கொடுத்துள்ளார். அந்த வீட்டில் இருந்துதான் பணம் கைப்பற்றப்பட்டது. 18/D, 19/D and 20/D ஆகிய மூன்று ஃபிளாட்டுகளும் பார்த்தாவுக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆசிரியர் நியமன ஊழல்: மம்தாவின் வலது கரத்தை வீடு புகுந்து தூக்கிய அமலாக்கத்துறை.. அதிர்ச்சியில் தீதி.
இவை தவிர இருவருக்கும் பொதுவானதாக போல்பூரில் இருக்கும் சாந்திநிகேதனில் ஒரு ஃபிளாட் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அங்கு பல வீடுகள் மற்றும் இடங்கள் அமலாக்கத்துரையின் சோதனைக்குள் வந்துள்ளன.