கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன் வாங்கி அதைத் திரும்ப செலுத்தாமல் ஏமாற்றிய பணமோசடி வழக்கில் நரேஷ் கோயலின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது குடும்பத்தினர் மற்றும் பிறருக்கு எதிரான பணமோசடி வழக்கில் ரூ.538.05 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இயக்குனரகம் முடக்கியுள்ளது.

முடக்கப்பட்ட சொத்துக்களில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பெயரில் உள்ள 17 குடியிருப்புகள், பங்களாக்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. சில சொத்துக்கள் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் மற்றும் மகன் நிவான் கோயல் ஆகியோரின் பெயர்களில் உள்ளன.

இந்தச் சொத்துக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருப்பது மட்டுமின்றி, லண்டன், துபாய் போன்ற வெளிநாட்டு நகரங்களிலும் உள்ளன. இத்தகவலை அமலாக்கத்துறை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

உளவு எச்சரிக்கை மெயிலுக்கும் ஜார்ஜ் சோரஸுக்கும் தொடர்பு! எலான் மஸ்க் சொல்றதை கேளுங்க... அமித் மாளவியா அதிரடி

Scroll to load tweet…

கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன் வாங்கி அதைத் திரும்ப செலுத்தாமல் ஏமாற்றிய பணமோசடி வழக்கில் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை இரண்டு மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தது. செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயில் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்காக வழங்கப்பட்ட வங்கக்கடன் தொகையை நரேஷ் கோயல் தனது தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்தியுள்ளார் என்று அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. விசாரணையின் போது, கனரா வங்கி, பிஎன்பி, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் கடன் மோசடி நடந்திருப்பதையும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.

இந்தியர்கள் ஹமாஸுக்கு எதிராக நிற்க வேண்டும்! ஹமாஸ் தலைவரின் மகன் மொசாப் கோரிக்கை