உளவு எச்சரிக்கை மெயிலுக்கும் ஜார்ஜ் சோரஸுக்கும் தொடர்பு! எலான் மஸ்க் சொல்றதை கேளுங்க... அமித் மாளவியா அதிரடி
ஜார்ஜ் சோரோஸ் எவ்வளவு மோசமானவர் என்று எலான் மஸ்க் கூறுகிறார் எனக் கூறி ஒரு வீடியோ அமித் மாளவியா பகிர்ந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் தொலைபேசிகளில் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் அரசு தங்களை உளவு பார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளன. ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து தங்களுக்கு வந்த எச்சரிக்கை மின்னஞ்சலை ஆதாரமாகக் காட்டி எதிர்க்கட்சியினர் கூறியுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜக ஐடி பிரிவு பதில் அளித்துள்ளது.
பாஜக தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மாளவியா ஆப்பிள் அனுப்பிய ஈமெயிலுக்கும் அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
ஜார்ஜ் சோரோஸ் நிதியுதவி பெறும் 'அக்ஸஸ் நவ்' என்ற தொண்டு நிறுவனத்திற்கும் ஆப்பிள் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கும இடையேயான தொடர்பை விவரித்து ட்விட்டரில் தொடர்பதிவுகளை அமித் மாளவியா பதிவிட்டுள்ளார். ஆப்பிள் அனுப்பிய மின்னஞ்சல்கள் எப்படி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டும் வந்துள்ளன என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியர்கள் ஹமாஸுக்கு எதிராக நிற்க வேண்டும்! ஹமாஸ் தலைவரின் மகன் மொசாப் கோரிக்கை
இதனால், ராகுல் காந்தி இதுபற்றி அவசரமாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியதில் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ள அவர் இது மோசமான சதி என்றும் அமித் மாளவியா குற்றம்சாட்டுகிறார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் பதிவிற்கு பதிலளித்துள்ள அமித் மாளவியா, "நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைப்பேசிகள் அரசின் ஆதரவுடன் உளவு பார்க்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை வந்திருப்பதை மறுக்க முடியாது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டும் அப்படி ஈமெயில் வந்தது ஏன்?" என்று கேட்டிருக்கிறார்.
பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு உளவு பார்ப்பதாக வெளியான குற்றச்சாட்டு இதுவரை தீர்க்கப்படாத நிலையில், அதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டு வந்திருக்கிறது என்றும் இது வெறும் சந்தேகம் தான் என்றும் அமித் மாளவியா குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் புதிய வேகக் கட்டுப்பாடு! நவ. 4 முதல் ஓவர் ஸ்பீடில் போகும் வாகனங்களுக்கு ஆப்புதான்!
பெகாசஸ் சரச்சை எழுந்தபோது, அப்போதைய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் நிதியமைச்சகம் அந்தக் குற்றச்சாட்டுகள் பிழையானவை என்று கூறிய செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை அமித் மேற்கோள் காட்டியுள்ளார். அப்போது, "நீங்கள் உள்துறை அமைச்சராக இருந்தது நினைவிருக்கிறதா மிஸ்டர் சிதம்பரம்?” என்றும் அமித் மாளவியா கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், எலான் மஸ்க்கின் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள அமித் மாளவியா, "ஜார்ஜ் சொரோஸ் எவ்வளவு மோசமானவர் என்பது பற்றி எலான் மஸ்க் கூறுகிறார். ஆனால், ராகுல் காந்தி தலைமையிலான இந்தியாவின் எதிர்க்கட்சி அவருக்கு நெருங்கிய கூட்டாளியாக இருக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.