Asianet News TamilAsianet News Tamil

இந்தியர்கள் ஹமாஸுக்கு எதிராக நிற்க வேண்டும்! ஹமாஸ் தலைவரின் மகன் மொசாப் கோரிக்கை

"இஸ்லாமிய பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் ஏற்க மாட்டோம் என்பதை உலகெங்கிற்குச் சொல்லுங்கள்" என்றும் ஹமாஸ் நிறுவனரின் மகன் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். 

Mosab Hassan Yousef want Indians to rise support against Hamas sgb
Author
First Published Nov 1, 2023, 6:57 PM IST | Last Updated Nov 1, 2023, 7:20 PM IST

இந்தியர்கள் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நிற்க வேண்டும் என்று ஹமாஸ் நிறுவனர் ஹசன் யூசுப்பின் மகன் மொசாப் ஹசன் யூசப் வலியுறுத்தியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் அவர், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியர்கள் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

"இஸ்லாமிய பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் ஏற்க மாட்டோம் என்பதை உலகெங்கிற்குச் சொல்லுங்கள்" என்றும் ஹமாஸ் நிறுவனரின் மகன் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். ஹமாஸ் அமைப்பினர் நெடுங்காலமாகவே பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

"அவர்கள் ஆலயங்கள், பேருந்துகள், சந்தைகள், மளிகைக் கடைகள், கடற்கரை கிளப்புகள், இரவு விடுதிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இது ஒன்றும் புதிதல்ல" என்று கூறிய அவர், "உலகம் ஏன் இன்றும் பாராமுகத்துடன் இருக்கிறது எனக்குப் என்று புரியவில்லை" என்றும் தெரிவித்தார்.

சோகத்தில் முடிந்த மருத்துவ சாதனை!பன்றி இதயம் பொருத்தப்பட்ட முதியவர் 40 நாளில் உயிரிழப்பு

Mosab Hassan Yousef want Indians to rise support against Hamas sgb

சிவனை வழிபடுபவர்கள் போர்வீரர்கள் என்றும் கூறிய மொசாப், "இந்தியாவில் என் படை, என் போர்வீரர்களின் படை, சிவ வழிபாடு செய்பவர்கள். கிருஷ்ணரைப் புரிந்துகொண்டு கீதையைப் புரிந்துகொள்பவர்கள். உபநிடதத்தைப் புரிந்துகொண்டு, இந்தப் போரின் ஆன்மீகப் பரிமாணத்தைப் புரிந்துகொள்பவர்கள்" என்றும் மொசாப் ஹசன் யூசுப் பேசினார்.

மேலும், "உங்களுக்கு தெரியும், இந்தியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்துக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மற்ற உலகத்துடன் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள். கிறிஸ்தவர்கள் கூடவே வாழ்கிறார்கள், யூதர்களுடன் வாழ்கிறார்கள். அப்படியென்றால் எப்பொழுதும் இஸ்லாமியர்களிடம் இருந்து மட்டும் ஏன் இந்த வன்முறை வருகிறது. நிச்சயமாக எல்லா இடங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள்.ஆனால் அதைவிட பெரிய அளவில் இஸ்லாமியர்களிடம் இருந்து வருவதை நாம் பார்க்கிறோம்" என்றும் யூசுப் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியையும் மொசாப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ஒரு தேசத்தை எப்படிக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை காந்தியிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

M3 மேக்புக் ப்ரோ மாடல்களில் புதுமை செய்த ஆப்பிள்! டிஸ்பிளே 20% ப்ரைட்டா இருக்குமாம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios