இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிப்பதாக திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தனது குடும்பத்தினர் மூலமாக, டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது ப.சிதம்பரம் சில தகவல்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், அதலபாதாளத்தில் பொய் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை பற்றி திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் சில பதிவுகளை பதிவிட்டுள்ளார். இந்திய பொருளாதாரத்தின் நிலைமை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. முடங்கி கிடைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் உள்ள திட்டம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய பொருளாதாரத்தால் ஏழைகள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க;- பாஜகவில் சேரும் தினகரன் கட்சி விவிஐபி... அதிர்ச்சியில் மன்னார்குடி வட்டாரம்..!

 

இதையும் படிங்க;- ஆடம்பர ஆசையால் ஹைடெக் விபச்சாரம்... லட்சங்களில் கொட்டுவதால் திசை மாறும் கல்லூரி மாணவிகள்..!

பொருளாதார சரிவால் முதலீடுகள், வேலைவாய்ப்பு, வர்த்தகம் குறைந்து நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம்
குறைந்துள்ளதால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது ஏழைகள் தான். சரிவு நிலை இருளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது?’ என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.