பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் நெல்லையில் ஏழைப் கல்லூரி மாணவிகளை குறிவைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. 

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள பாலியல் சம்பவங்களால் பெண்கள் சமுதாயத்தில் இழிவுக்குப் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதுதான் பொள்ளாச்சி சம்பவம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், மீண்டும் கல்லூரி மாணவிகளின் பிரச்சனை தலைதூக்கியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த பீட்டர் மார்ட்டின் என்பவர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ப்ராஜெக்ட் செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 

இங்கே ப்ராஜெக்ட் உதவி கேட்டு வரும் மாணவிகளை 'சொகுசு வாழ்க்கை, லட்சங்களில் பணம்' என ஆசை வார்த்தைகள் கூறி அப்பகுதியை சேர்ந்த பணக்கார தொழிலதிபர்களுக்கு விருந்தாக்கி, விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார். பெரும்பாலும் ஏழ்மையான குடும்ப சூழலில் உள்ள பெண்களையே குறிவைக்கும் இவர், அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாணவிகளை விபச்சாரத்திற்குள் சிக்க வைத்து இருக்கின்றான். 

இந்நிலையில் நட்சத்திர ஓட்டலில் ஒரு பெண்ணை இரண்டு நபர்களுக்கு விருந்தாக்க இருந்த நிலையில் ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகமடைந்து போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஹைடெக் விபச்சாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பீட்டர் மார்ட்டினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து இதுவரை நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கைப்பற்றியுள்ளனர்.