அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று நள்ளிரவு 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போர்ட்பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் 112 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி (IST) 02:56:12 மணிக்கு இந்த நடுக்கம் உணரப்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் ": இரவு 2.56 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் நீளம்: 93.04, ஆழம்: 10 கி.மீ., இடம்: 112 கி.மீ.” என்று தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
ஒரே வாரத்தில் அந்தமானில் ஏற்படும் 2-வது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக, திங்களன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி (IST) 12:53:24 மணிக்கு தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.
