"தமிழகம் சிறந்த தலைவர்களை கொடுத்த பூமி" - பெருமையோடு சொன்ன மோடி.. அதன் பின் திமுக மீது வைத்த குற்றசாட்டு என்ன?
மணிப்பூர் கலவரத்தை மேற்கொள்ளிட்டு இன்று மக்களவையில் மத்தியை ஆளும் பிரதமர் மோடியின் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானமானது படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சியினர் மக்களவை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறினார்.
இன்று மாலை மக்களவையில் பேச துவங்கிய பிரதமர் மோடி, இந்திய மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார். அதன் பிறகு எதிர்க்கட்சிகள், மக்களின் பசியைப் பற்றி யோசிக்காமல் மாறாக அவளுடைய அதிகார பசி நினைத்து யோசித்து கொண்டு இருக்கிறார்கள் என்று கடுமையாக சாடி பேசினார் இந்திய பிரதமர் மோடி அவர்கள்.
கச்சத்தீவு பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், ஆனால் கச்சத்தீவை தாரை வார்த்தது இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் தான் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகளாகிய நீங்கள் நோ-பாலை போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள், நாங்கள் அதில் செஞ்சுறியாக அடித்து தள்ளுகிறோம் என்றும் கிண்டலாக பேசியிருந்தார் பிரதமர் மோடி.
புதுசு கண்ணா புதுசு.. டாடாவின் ஏர் இந்தியா - தனது புதிய பிராண்ட் லோகோவை இன்று வெளியிட்டது!
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திமுக அமைச்சர்கள் சிலர் இந்தியன் என்பதில் எந்தவித பெருமையும் இல்லை என்று கூறியதை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி, தமிழகம் மிக செழுமையான வரலாறுகளைக் கொண்ட ஒரு அற்புதமான மண்.
ராஜாஜி, கர்ம வீரர் காமராஜர், எம்ஜிஆர் மற்றும் ஐயா அப்துல்கலாம் போன்ற பல தலைவர்களை கொடுத்த பூமி என்று பெருமையோடு கூறினார். ஆனால் அதே சமயம் அங்குள்ள திமுக அமைச்சர்கள், இந்தியன் என்பதில் பெருமையே இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு தேசப்பற்று என்பதே இல்லை என்று மிகக் காட்டமாக கூறினார்.
தற்பொழுது அவர் பேசிய அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள். அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாதயாத்திரை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.. மக்களவையில் படுதோல்வி அடைந்த நம்பிக்கையில்லா தீர்மானம்!