JMI ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக வேந்தராக டாக்டர் சையத்னா முஃப்தால் சைபுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சையத்னா முஃப்தால் சைபுதீன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் வகிப்பார்.
ஜேஎம்ஐ பல்கலைக்கழக உறுப்பினர்கள் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அப்போது அடுத்த வேந்தார் யார் என்பது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. ஜேஎம்ஐ பல்கலைக்கழக வேந்தாக இருந்த டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டு முடிவடைந்தது. அவரைத்தொடந்து தற்போதைய வேந்தாக டாக்டர் சையத்னா முஃப்தால் சைபுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டாக்டர். சையத்னா முஃப்தால் சைபுதீன், உலக தாவூதி போஹ்ரா முஸ்லிம் சமூகத்தின் தலைவர் ஆவார். கடந்த ஆண்டு வரை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பதவி வகித்து வந்தார். கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.
போஹ்ரா சமூகத்தின் மிகவும் பாராட்டப்பட்ட உலகளாவிய திட்டங்களான சைஃபி புர்ஹானி அப்லிஃப்ட் திட்டம், டர்னிங் தி டைட், ப்ராஜெக்ட் ரைஸ் மற்றும் FMB சமூக சமையலறை வேலைகள் பசியை போக்குதல், உணவு கழிவுகளை குறைத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் பலவற்றை அவர் மேற்பார்வையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சையத்னா முஃப்தால் சைபுதீன், பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அவர் செல்வாக்கு மிக்க 500 முஸ்லீம்களில் இடம்பெற்றுள்ளார். இந்த சமூகத்திற்கு நேர்மையான பங்களிப்பை வழங்கவும், சிறந்த குடிமக்களை உருவாக்கவும், நல்லுறவு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் உறுதிபூண்டுள்ளார்.
டாக்டர். சையத்னா முஃப்தால் சைபுதீன், சூரத்தில் உள்ள தாவூதி போஹ்ரா கல்வி நிறுவனமான அல்-ஜாமியா-துஸ்-சைஃபியா மற்றும் அல்-அசார் பல்கலைக்கழகம் மற்றும் எகிப்தின் கெய்ரோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். மேலும் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கடந்த ஐந்து ஆண்டுகளாக வருடாந்திர ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அரபு மற்றும் உருது கவிதைகளையும் எழுதியுள்ளார்.
நடு வானில் விமானத்தில் அலறிய அபாய ஒலி! 8வது சிறுமியின் செலயலால் பீதியடைந்த பயணிகள்!
ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
