நடு வானில் விமானத்தில் அலறிய அபாய ஒலி! 8வது சிறுமியின் செலயலால் பீதியடைந்த பயணிகள்!

கவுகாத்தியிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவழியில் திடீரென ஆபாயச் சத்தம் ஒலித்ததால் பயனிகள் பீதியடைந்தனர். விமானத்தில் பயணித்த 8வயது சிறுமி தவறுதலாக உயிர் காப்பு கவசத்தை இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

in Mid-air Siren blows in flight, and all passenger panic! an 8-year-old pulls out life jacket on Guwahati- Chennai flight

கவுகாத்தியிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவழியில் திடீரென அபாயச் சத்தம் ஒலித்ததால் பயனிகள் பீதியடைந்தனர். விமானத்தில் பயணித்த 8வயது சிறுமி தவறுதலாக உயிர் காப்பு கவசத்தை இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கவுகாத்தியிலிருந்து சென்னைக்கு சுமார் 147 பயணிகளுடன் இன்டிகோ விமானம் வந்தது. வானில் நடுவழியில் வந்து கொண்டிருந்த போது தீடிரென சைரன் அபாய ஒலி ஒலித்ததால் பயணிகளும், விமான பணிப் பெண்களும் பீதியடைந்தனர். உடனடியாக சோதனை மேற்கொடதில் 8வயது சிறுமி தவறுதலாக உயிர் காப்பு கவசம் அருகேயிருந்த அபாய ஒலி எழுப்பும் பட்டனை அழுத்தியது தெரியவந்தது. விமான குழுவினர் உடனடியாக அதனை சரி செய்து பயணிகளை அமைதிப்படுத்தனர்.

விமானம் சென்னையில் தரையிறங்கியதும், 8 வயது சிறுமி மற்றும் அவர் உடன் வந்த அவரது பாட்டி இருவரையும் போலீசார் விசரணை மேற்கொண்டனர். பொதுவாக இது போன்ற செயல் தேவையின்றி நிகழ்த்துவது தண்டனைக்குறிய குற்றமாகும். ஆனால், இது 8 வயது சிறுமியின் தெரியத தவறால் மண்ணிப்பு கடிதம் மற்றும் எச்சரிக்கை செய்து அனுப்பிவைக்கப்படனர்.

ஷாக்கிங் நியூஸ்.. H3N2 வைரஸுக்கு இந்தியாவில் 2வது நபர் மரணம் - தீவிரமாக பரவுவதால் அதிர்ச்சி
 

 
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios