அபிநந்தன் அருகில் நிற்கும் பெண் அதிகாரி யார் தெரியுமா..? 

பாகிஸ்தான் ராணுவதினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை நேற்று இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான். 

அப்போது அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண் புகைப்படமும் வைரலானது. பலரும் யார் அந்த பெண் அதிகாரி என விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் அந்த பெண் அதிகாரி யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்ட அபிநந்தனுடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் அதிகாரி அபிநந்தனின் அருகில் நின்றுகொண்டிருந்தார். இந்த பெண் அதிகாரியின் பெயர் டாக்டர் பஹீரா பக்டி. இவர் இந்திய விவகாரங்களை கையாளும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குனர் என தெரிய வந்துள்ளது 

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும், அதே வேளையில் பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்புஷன் ஜாதவ் வழக்கை கையாளக்கூடிய அதிகாரிகளில் இவரும் ஒருத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

குல்பூஷண் இந்திய உளவாளி என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ளார். கடந்த ஆண்டு இவரை சந்திக்க அவரது தாய் மற்றும் மனைவி இஸ்லாமாபாத் சென்று இருந்தனர். இவர்களின் சந்திப்பின் போதும் பஹீரா உடன் இருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான்,அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கும் தருவாயிலும், பெண் அதிகாரியான பஹீரா இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.