Digital Payment to the people about the campaign - the Reserve Bank to banks

டிஜிட்டல் பேமெண்ட் முறையான யு.பி.ஐ. மற்றும் *99#(யு.எஸ்.எஸ்.டி.கோட்) குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடை செய்தபின், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்ைககள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல்பரிமாற்ற வழிமுறைகளான யு.பி.ஐ. மற்றும் *99# (USSD) ஆகியவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வங்கிகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

இதில் யு.பி.ஐ. என்பது பல்வேறு வங்கிக்கணக்குகளை ஒருமொபைல் செயலி மூலம் இயக்கும் தன்மை கொண்டது. யு.எஸ்.எஸ்.டி சேவை என்பது, இணையதள இணைப்பு இல்லாமல் பணத்தை பரிமாற்றம் செய்யும் செயலியாகும். 

இந்த பிரசாரங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை வேலை நேரம் முடிந்தபின் தொடங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.