ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஆந்திர மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். உலகின் பணக்கார கடவுளாக அறியப்படும் ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் என்று உண்டியலில் செலுத்துகின்றனர். சாதாரண நாட்களிலேயே அதிகமான கூட்டம் காணப்படும் திருப்பதியில் விடுமுறை தினங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. பள்ளிகள்,கல்லூரிகள்,திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் திருப்பதியில் பக்தர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து ராமதாசுக்கு வந்த அழைப்பு..! ஆசிரியர்களுக்கு ஆதரவாக அதிரடி கோரிக்கை..!

WhatsApp_Image_2020-03-20_at_12

இன்று மதியம் 12 மணி வரை திருமலையில் தங்கியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் வழங்கப்பட்ட பிறகு கோயில் மூடப்பட்டது. ஒரு வார காலத்திற்கு பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கோவிலில் தினசரி நடைபெறும் பூஜைகள் அனைத்தும் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல தொடரும் என தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது. திருமலைக்கு செல்லும் மலைபாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பல வருடங்களுக்கு பிறகு திருப்பதி கோவில் பக்தர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் உணவங்கள், கடைகள் மூடல்..! வணிகர் சங்கம் அறிவிப்பு..!