அமெரிக்காவில் இருந்து ராமதாசுக்கு வந்த அழைப்பு..! ஆசிரியர்களுக்கு ஆதரவாக அதிரடி கோரிக்கை..!
அமெரிக்காவில் ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிட்டிருப்பது போல தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 206 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். இன்று காலையில் ஜெய்பூரில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்தியாவில் கொரோனா பலி 5 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் கொரோனா பாதிற்பிற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை மார்ச் 31 ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கிப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கல்வி நிறுவனங்கள் அனைத்திற்க்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் ஆகியோர் வழக்கம் போல பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஆசிரியர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. தங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உணவங்கள், கடைகள் மூடல்..! வணிகர் சங்கம் அறிவிப்பு..!
இந்த நிலையில் அமெரிக்காவில் ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிட்டிருப்பது போல தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், ‘அமெரிக்காவிலுள்ள உலக புகழ்பெற்ற இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றும் எனது உறவினர் பாபு என்பவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.அங்கு கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் வீட்டிலிருந்து பணி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதனால் அவர் பாதுகாப்பாக வீட்டிலிருந்தபடி பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் வீட்டிலிருந்து பணி செய்யும் வாய்ப்பை வழங்கி அவர்களை பாதுகாக்கலாமே?’, என ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! உச்சகட்ட பதற்றத்தில் உலக நாடுகள்..!