பக்தர்கள் ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட் போன்ற ஆடைகளை அணிய உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராதாராணி கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பர்சானாவில் உள்ள ராதாராணி கோவிலில் அரை பேன்ட், பெர்முடா ஷார்ட்ஸ் மற்றும் மினி ஸ்கர்ட் அணிந்து பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கோயில் நிர்வாகம் பிறப்பித்துள்ளது. மேலும் இரவு உடைகள் மற்றும் கிழிந்த ஜீன்ஸ் ஆகிய உடைகள் அணிந்து கோயிலுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு அதிரடியாக இன்று வீழ்ச்சி; காரணம் இதுதான்!!
இதுதொடர்பாக நேற்று அந்த கோவிலுக்கு வெளியே போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஒரு வாரத்தில் நடைமுறைக்கு வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது என்று கோயில் அதிகாரி ராஸ்பிஹாரி கோஸ்வாமி தெரிவித்தார். மதுராவில் உள்ள ராதா தாமோதர் கோவிலுக்கு பார்வையாளர்கள் இதுபோன்ற ஆடைகளை அணிய தடை விதித்ததை அடுத்து தற்போது ராதா ராணி கோவிலிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே போல் சில மாதங்களுக்கு முன்பு . உத்தரபிரதேசத்தில் உள்ள பிருவா பாடி கோயில் நிர்வாகம் ஜூன் 21ம் தேதி கோவில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்தது. கோவிலுக்குள் ஜீன்ஸ், டி-சர்ட், நைட் சூட், கிழிந்த ஜீன்ஸ் மற்றும் இதர ஆடைகளுக்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் மட்டும் கோயில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பது இல்லை. சமீபத்தில், சிம்லாவில் உள்ள ஒரு நூற்றாண்டு பழமையான ஜெயின் கோவிலில் பக்தர்கள் குட்டையான ஆடைகளை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. "இந்து கலாச்சாரத்தின்" ஒழுக்கம், அலங்காரம் மற்றும் மதிப்புகளை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி, கோவிலில் உள்ள அதிகாரிகள் அவர்களின் நடவடிக்கையை ஆதரித்தனர். இந்த கோவில் ஸ்ரீ திகம்பர் ஜெயின் சபாவால் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
