அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு அதிரடியாக இன்று வீழ்ச்சி; காரணம் இதுதான்!!

அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்கப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் விசாரணை செய்யத் துவங்கியதை அடுத்து அந்தக் குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. 
 

Adani group of shares down today in the BSE after US regulatory Scrutiny

அதானி குழுமம் தனது நிறுவனங்களின் பங்குகளை வேண்டுமென்றே அதிகரித்துக் காட்டியதாக அமெரிக்காவின் ஷார்ட் செல்லிங் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கும் ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி மாதம் குற்றம்சாட்டி இருந்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடந்த சில மாதங்களுக்கும் முன்பு வெகுவாக குறைந்தது. சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் சந்தையில் இருந்து காணாமல் போனது. இதனால் கவுதம் அதானியும் உலக பணக்காரார்கள் பட்டியலில் 3ல் இருந்து இடத்தில் இருந்து 30ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். 

இந்தச் சரிவினால் பங்குச் சந்தையில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் பெரிய இடியாக இருந்தது. அதானி குழுமத்தின் மீது உச்சநீதிமன்றத்தின் நிபுணர் குழுவும், செபியும் விசாராணை மேற்கொண்டு இருந்தது. சமீபத்தில் தான் உச்சநீதிமன்றம் விசாரணையை முடித்து அறிக்கையை சமர்பித்தது. முறைகேடுகள் நடந்து இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இன்னும் செபி ஆய்வை முடிக்கவில்லை.  

ஊழியர்கள் Form 16 இல்லாமலே வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

இந்த நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றம் கண்டு வந்தன. திடீரென இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.  இதற்குக் காரணம், அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்கப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சரிந்த பங்குகளின் மதிப்பு எப்படி இவ்வளவு விரைவாக உயரும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சில விசாரணைகளை துவக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த விசாரணையில் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கும் முதலீட்டாளர்களிடம் என்ன கூறப்பட்டு இருக்கிறது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த விசாரணை குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்துதான் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இன்று சரிந்ததாக கூறப்படுகிறது. 

நம்பி வாங்கலாம் எஸ்பிஐ பங்குகள்; ரூ. 700 வரை உச்சத்தை எட்டுமாம்!!

மொத்தமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இன்று மட்டும் 10% குறைந்து இருக்கிறது. அதானி எண்டர்பிரைசஸ் பங்கு மதிப்பு 10%, அதாவது ஒரு பங்கின் மதிப்பு ரூ. 2,162.8 ஆக மும்பை பங்குச் சந்தையில் சரிந்துள்ளது. அதானிபோர்ட்ஸ் அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய பங்குகளின் மதிப்பு 5%மும், அதானி டோட்டல் காஸ், அதானி க்ரீன் எனர்ஜி, அதானி வில்மர் ஆகிய பங்குகளின் மதிப்பு 3%மும் குறைந்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios