நம்பி வாங்கலாம் எஸ்பிஐ பங்குகள்; ரூ. 700 வரை உச்சத்தை எட்டுமாம்!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை வாங்க வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கியின் வலுவான இருப்புநிலை மற்றும் சிறந்த காலாண்டு முடிவுகள் இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. தற்போது இந்த வங்கியின் ஒரு பங்கின் விலை ரூ.564 ஆக உள்ளது. அடுத்த ஓராண்டில் இந்தப் பங்கு ரூ.700 அளவைத் தாண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
மோதிலால் ஓஸ்வால் கூற்றுப்படி, எஸ்பிஐ பங்குகள் 25 சதவீதம் வரை லாபம் தரலாம் என்று தெரிவித்துள்ளது. பொருளாதார வல்லுனர்கள் பாரத் ஸ்டேட் வங்கியின் ஒரு பங்கிற்கு ரூ.700 இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
எஸ்பிஐயின் சந்தை மூலதனம் ரூ. 505,490.02 கோடியாக உள்ளது. கடந்த 52 வாரங்களில் ஒரு பங்கின் அதிகபட்ச மதிப்பு ரூ. 629.65 ஆகவும், குறைந்தபட்சமதிப்பு ரூ. 430.8 ஆகவும் இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் எஸ்பிஐக்கு மொத்தம் 409,445 பங்குகள் உள்ளன.
நிப்டியில் பிள்ளையார் சுழி போட்டு வெளுத்து வாங்கும் அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் பங்குகள்!!
பாரத ஸ்டேட் வங்கியின் நான்காவது காலாண்டு (ஜனவரி-மார்ச் 2023) முடிவுகள் சிறப்பாக உள்ளன. இந்தக் காலகட்டத்தில் வங்கியின் லாபம் 83% ஆக அதிகரித்துள்ளது. அறிக்கைகளின்படி, 2022-23 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் எஸ்பிஐயின் லாபம் 83.18% ஆக அதிகரித்து ரூ.16,694 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கியின் லாபம் ரூ.9,113 கோடியாக இருந்தது.
எஸ்பிஐ யோனோ செயலி:
ஊடக செய்திகளின்படி, எஸ்பிஐ வங்கி டிஜிட்டல் முறையில் மிகவும் வலுவாக உள்ளது. வங்கியின் யோனோ செயலி புதிய சாதனைகளை படைத்து வருகிறது. YONO 143 மில்லியன் பதிவிறக்கங்களையும், 60 மில்லியன் பதிவு செய்த பயனர்களையும் கொண்டுள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில், 24,300 கோடி மதிப்பிலான 13.9 லட்சம் டிஜிட்டல் கடன்களுக்கு எஸ்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
தங்கப் பத்திரம் திட்டம் என்றால் என்ன.? மற்ற தங்க வடிவங்களை விட இது சிறந்ததா? முழு விபரம்