500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலியால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. 

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதியன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து அதிர்ச்சியில் ஆங்காங்கே சிலர் உயிரிழந்தனர். அதேபோன்று தனியார் மருத்துவமனைகளில் சில்லறை தட்டுப்பாட்டால் மருத்துவம் பார்க்க மறுத்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியது.

மேலும் பல இடங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வரிசையில் நின்ற பலர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இதுவரை கடந்த 6 நாட்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மரணங்களின் அடிப்படையில் இந்த புள்ளி விபரம் வெளியாகியிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை அதிக அளவில் இருக்க வாய்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.