Asianet News TamilAsianet News Tamil

"இனி பழைய நோட்டுக்களை ஒருமுறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்" - ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

demonetisation currency-problems
Author
First Published Dec 19, 2016, 4:34 PM IST


வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதில் புதிய கிடுக்கிப்பிடிகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.

அதன்படி, பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரூ. 5 ஆயிரத்துக்கு மேல், இம்மாதம் 30-ந் தேதிக்குள் ஒரு முறை மட்டுமே வங்கியில் ஒருவர் தனது சொந்த கணக்கில் டெபாசிட் செய்ய முடியும் என ரிசர்வ் வங்கி நேற்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதே சமயம், ரூ. 5 ஆயிரம் வரை செல்லாத ரூபாய் நோட்டுகளாக இம்மாதம் 30-ந்தேதி வரை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யத் தடையில்லை. ஆனால், வருமான வரித்துறை விசாரணை நடத்தும் சூழல் ஏற்பட்டால் அதற்கான விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

demonetisation currency-problems

மோடி அறிவிப்பு

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், புழக்கத்தில் இருந்த ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் மக்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்க பல கெடுபிடிகளை விதித்து வருகின்றன.

கட்டுப்பாடுகள்

ஏ.டி.எம்.களில் நாள் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் வரை என்றும், வாரத்துக்கு ரூ.24 ஆயிரம்வரை எடுக்கலாம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

மேலும், செல்லாத ரூபாய்களை டிசம்பர் 30-ந்தேதி வரை வங்கிக் கணக்கில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என மத்திய அரசு தெரிவித்தது.

தீவிரம்

இந்நிலையில், கருப்பு பணத்தை வங்கியில் அதிகமாக டெபாசிட் செய்வதை தடுக்கும் வகையில் தனது நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

பாக்ஸ் மேட்டர்.....

அதன்படி ரிசர்வ் வங்கி  புதிய உத்தரவுகளை நேற்று பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

1. அதன்படி, தனிநபர் ஒருவர், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தனது வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமாக இம்மாதம் 30-ந்தேதிக்குள் பல முறை டெபாசிட் செய்ய முடியாது, ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

demonetisation currency-problems

2. மேலும், செல்லாத ரூபாய்களாக ரூ. 5 ஆயிரம்வரை வங்கிக்கணக்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யத் தடையில்லை. ஆனால், வருமான வரித்துறையினர் குறிப்பிட்ட கணக்கு உடையவரை விசாரனைக்குள் கொண்டு வந்தால், அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்

3. செல்லாத ரூபாய் நோட்டுகளாக ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமாக  தனது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யும்போது வங்கி அதிகாரிகள் இருவர் அந்த கணக்கு வைத்து இருப்போரிடம் விசாரணை நடத்துவார்கள். ஏன் முன்கூட்டியே இதை டெபாசிட் செய்யவில்லை,  உள்ளிட்ட பல கேள்விகளை முன் வைப்பார்கள். அதற்குரிய மனநிறைவான பதில் அளிக்க வேண்டும். அந்த பதில்களை அனைத்தும் எழுத்துப் பூர்வமாக பதிவு செய்யப்படும். தேவைப்படும் போது விசாரணை செய்யப்படும். விசாரணை, மற்றும் ஆய்வுக்குபின் அவர்களின் மனதுக்கு நிறைவான பதில் அளிக்கும் பட்சத்தில் டெபாசிட் செய்ய முடியும்.

4. தன்னுடைய வங்கிக்கணக்கு தவிர்த்து, மற்றொருவருடைய வங்கிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். ஆனால், யாருடைய கணக்கில் டெபாசிட் செய்ய இருக்கிறோமோ அவரின் ஒப்புதல் கடிதம், அவரின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை டெபாசிட் செய்வோர் வங்கியில் சமர்பிக்க வேண்டும்.

5. கே.ஒய்.சி. விதிமுறைகள் படி வங்கிக்கணக்கு வைத்து இருப்பவர் மட்டுமே, செல்லாத ரூபாய்  நோட்டுகளை ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமாகடெபாசிட் செய்ய முடியும். அவ்வாறு கே.ஒய்.சி. விதிமுறைகள் படி வங்கிக்கணக்கு இல்லாதவர்கள், ரூ. 50 ஆயிரம் வரை மட்டுமே டெபாசிட்செய்ய இயலும்.

6. ஒருவர், பழைய ரூ. 500,ரூ.1000 மூலம் ரூ. 5 ஆயிரத்துக்கு குறைவாக, பல முறை டெபாசிட் செய்து இருந்தால், அந்த தொகையின் கூட்டுமதிப்பு, ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் மிக அதிகமாக இருந்தால், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும்  பட்சத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்.

demonetisation currency-problems

7. புதிய ரூபாய் நோட்டுகளான 2000,500, மற்றும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரூ. 100, ரூ.50, ரூ.20, ரூ.10 ஆகிய நோட்டுகளை வங்கியில்டெபாசிட் செய்வதற்கு வரைமுறை கிடையாது.

தடை இல்லை

கருப்பு பணத்தை கணக்கில் கொண்டு வருவதற்காக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் கொண்டுவந்த ‘பிரதம மந்திரி கல்யான் ஜோஜனா 2016’ திட்டம் கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை கணக்கில் வராத பணத்தை வைத்து இருப்போர் வருமான வரித்துறையினரிடம் தெரிவித்து 50 சதவீதம் வரி, 25 சதவீதம் பணத்தை 4 ஆண்டுகளுக்கு வட்டி இல்லா டெபாசிட் செய்து, மீதமுள்ள 25 சதவீதத்தை மட்டும் பெற்றுச் செல்லலாம் என அரசு தெரிவித்து இருந்தது. கருப்பு பணம் வைத்து இருப்போருக்கு கடைசி வாய்ப்பாகவும் அரசு தெரிவித்தது. இந்த திட்டத்தன்படி ஒருவர் பணம் டெபாசிட் செய்யத் தடை இல்லை.

இந்நிலையில், கருப்புபணம் வைத்து இருப்பவர்கள், தங்கள் வசம் இருக்கும் பணத்தை முழுமையாக வெளியே கொண்டு வரும் முயற்சியாக ரிசர்வ் வங்கி மூலம் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios