சாலைத் திட்டங்கள் நாட்டு முன்னேற்றத்தின் தூண்கள்: பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 246 கி.மீ. தொலைவுக்கான டெல்லி – டௌசா – லால்சோட் வழித்தடத்தைத் தொடங்கி வைத்தார்.
டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை போன்ற திட்டங்கள் நாட்டு முன்னேற்றத்தின் தூண்களாக விளங்குபவை என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
இன்று ராஜஸ்தான் மாநிலத்திக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி டௌசாவில் நடைபெற்ற நிகழ்ச்சில் கலந்துகொண்டார். அப்போது, டெல்லி - மும்பை விரைவுச் சாலைத் திட்டத்தின் முதல் கட்டமாக டெல்லி – டௌசா - லால்சோட் வழித்தடத்தைத் திறந்து வைத்தார்.
மேலும், 18,100 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 9 ஆண்டுகளாக, உள்கட்டமைப்புத் துறையில் மத்திய அரசு தொடர்ந்து பெரிய அளவில் முதலீடுகள் செய்து வருகிறது.” என்றார்.
Modi Jacket: பிரதமரின் பிளாஸ்டிக் ஜாக்கெட்டை வடிவமைத்த தமிழக இளைஞர்
“டெல்லி - மும்பை விரைவுச் சாலை மற்றும் மேற்கு ரயில்வேயின் பிரத்யேக சரக்கு வழித்தடம் ஆகியவை ராஜஸ்தான் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு வலுவான இரண்டு தூண்களாக விளங்கக்கூடியவை” என்றும் பிரதமர் கூறினார்.
பிரதமரின் வருகை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாலைப்போக்குவரத்துத் திட்டங்கள் குறித்த கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை சுமார் 1,400 கி.மீ. நீளத்துக்கு இந்தியாவின் மிக நீண்ட எக்ஸ்பிரஸ் சாலையாக அமைய உள்ளது. லட்சம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் டெல்லி - மும்பை இடையான பயணத் தொலைவு 12 சதவீதம் குறையும். பயண நேரமும் பாதியாகக் குறையும்.
டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்கள் வழியாக இந்தச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தச் சாலை மூலம் கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா, சூரத் ஆகிய நகரங்கள் இணைக்கப்படும்.
இதன் ஒரு பகுதியாக இன்று திறக்கப்பட்டுள்ள டெல்லி – டௌசா – லால்சோட் வழித்தடம் ரூ.12,150 கோடி செலவில் 246 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்தடுத்த வழித்தடங்களில் 2024ஆம் ஆண்டுக்குள் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சாலை டெல்லியில் இருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்குச் பயணிக்கும் நேரத்தை 5 மணிநேரத்தில் இருந்து மூன்றரை மணிநேரமாகக் குறைக்கும்.
Viral Video: திருமணக் கோலத்தில் பரீட்சைக்கு வந்த கேரளப் பெண்! லைக்ஸ் அள்ளும் வைரல் வீடியோ!