4 நாட்கள்.. 10,800 கி.மீ பயணம்.. 10 பொதுக்கூட்டங்கள்.!! ஓயாது உழைக்கும் பிரதமர் மோடி - குவியும் பாராட்டுக்கள்

பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்களில் 10,800 கி.மீ பயணம் செய்ய உள்ளார். இதற்கேற்ப பிரதமரின் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Pm narendra modi 4 days - over 10,800 Km travel - 10 public meetings - multiple development initiatives

கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி, பிரதமர் டெல்லியில் இருந்து லக்னோவிற்கு பயணம் செய்து உத்தரபிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 ஐ தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

பின்னர் மும்பை சென்று இரண்டு வந்தே பாரத் ரயில்கள் மற்றும் மும்பையில் சாலை திட்டங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு, அவர் நகரில் அல்ஜாமியா-துஸ்-சைஃபியாவின் புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் மீண்டும் டெல்லிக்கு வந்தார். பகலில் அவர் மொத்தம் 2700 கிமீ தூரத்தை கடந்தார்.

Pm narendra modi 4 days - over 10,800 Km travel - 10 public meetings - multiple development initiatives

இதையும் படிங்க..‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்

இன்று (பிப்ரவரி 11) பிரதமர் மோடி  திரிபுராவுக்குச் சென்றார். அங்கு அவர் அம்பாசா மற்றும் ராதாகிஷோர்பூரில் இரண்டு பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். இன்று பகலில் 3000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து பயணம் செய்தார்.

நாளை (பிப்ரவரி 12ஆம் தேதி) , டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளை நினைவுகூரும் ஆண்டு கொண்டாட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, அவர் ராஜஸ்தானின் தௌசாவுக்குச் சென்று பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். டவுசாவில் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய பிறகு, அவர் நேரடியாக பெங்களூருக்குச் செல்கிறார். அன்று பகலில் மொத்தம் 1750 கி.மீ பயணம் செய்ய இருக்கிறார்.

Pm narendra modi 4 days - over 10,800 Km travel - 10 public meetings - multiple development initiatives

பிப்ரவரி 13ஆம் தேதி அதிகாலை, பெங்களூருவில் ஏரோ இந்தியா 2023ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து திரிபுரா செல்லும் அவர், மதியம் அகர்தலாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் அவர் 3350 கிமீ தூரத்தை கடந்து டெல்லிக்கு திரும்புகிறார்.

எனவே, 90 மணி நேரத்திற்குள், பத்து பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவதற்காகவும், குடிமக்களின் நலனுக்காகப் பல வளர்ச்சி முயற்சிகளைத் தொடங்குவதற்காகவும் பிரதமர் 10,800 கி.மீ.க்கு மேல் பயணம் செய்திருப்பார். பிரதமர் மோடியின் அயராத இந்த பயணம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க..30 வயசு ஆச்சு.! இன்னும் திருமணம் ஆகாததால் பாதயாத்திரை செல்லும் ஆண்கள் - வினோத சம்பவம் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios