Viral Video: திருமணக் கோலத்தில் பரீட்சைக்கு வந்த கேரளப் பெண்! லைக்ஸ் அள்ளும் வைரல் வீடியோ!
கேரள பிசியோதெரபி கல்லூரி மாணவி ஸ்ரீ லெட்சுமி அனில் திருமணக் கோலத்தில் வந்து செய்முறை தேர்வை எழுதியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த புதுமணப் பெண் ஒருவர் திருமணக் கோலத்தில் பரீட்சை எழுத வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
ஸ்ரீ லெட்சுமி அனில் என்ற புது மணப்பெண் தனது திருமணப் புடவை மீது லேப் கோட் அணிந்து, கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்புடன் செய்முறை தேர்வு எழுதச் சென்றிருக்கிறார். அவர் தேர்வு எழுத வரும்போது அவருக்கு சக மாண மாணவிகளும் ஆசிரியர்களும் வரவேற்பு கொடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. இப்போது அதை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.
ஸ்ரீ லெட்சுமி கேரளாவில் உள்ள பெத்தானி நவஜீவன் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவி. வீடியோவில், அவர் மஞ்சள் நிற கல்யாணப் புடவையில் மீது லேப் கோட் அணிந்து, திருமண நகைகளை அணிந்தபடி, திருமண மேக்கப் அணிந்துபடி கொண்டு தேர்வு அறைக்குள் நுழைகிறார். அவரை சக மாணவ மாணவிகள் ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர்.
இன்னொரு வீடியோவில், ஸ்ரீ லெட்சுமி வரும் வழியிலேயே தேர்வுக்கு தயாராகி வருவதையும் காணலாம். அவர் தேர்வு மையத்தை அடைந்தவுடன் அவரது தோழிகளில் ஒருவர் புடவை மடிப்புகளை சரிசெய்கிறார். மற்றொருவர் அவள் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப் அணிவிக்கிறார். பரீட்சை முடிந்ததும் வெளியே காத்திருத்த தன் தாயைக் கட்டிப்பிடித்துக் மகிழ்வதையும் வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோக்களைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்குத் திருமண வாழ்த்துகளைத் தெரிவித்தது, தேர்விலும் வெற்றி பெற்ற வாழ்த்து கூறிவருகிறார்கள்.