kerala lottery: யோகம் இப்படி வரணும்! கடனால் வீட்டை விற்க முயன்றவருக்கு லாட்டரியில் ரூ.ஒரு கோடி பரிசு
கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் கடன் பிரச்சினையில் வீ்ட்டை விற்க இருந்தவருக்கு சில மணிநேரத்துக்கு முன்பாக, லாட்டரியில் ரூ.ஒரு கோடி பம்பர் பரிசு கிடைத்துள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் கடன் பிரச்சினையில் வீ்ட்டை விற்க இருந்தவருக்கு சில மணிநேரத்துக்கு முன்பாக, லாட்டரியில் ரூ.ஒரு கோடி பம்பர் பரிசு கிடைத்துள்ளது.
வீட்டை விற்பதற்கு சிலமணிநேரத்துக்கு முன்புதான் லாட்டரில் பரிசு கிடைத்தது அறிந்ததால், வீட்டை விற்கும் முடிவு கைவிடப்பட்டது
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில்வே டிக்கெட்டில் சலுகை: ஆனால்…!
கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் முகமது பாவா. பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி அன்னே. இருவருக்கும் 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் 2 மகள்களை முகமது திருமணம் செய்துகொடுத்துவிட்டார். மகனை கடந்த சில மாதங்களுக்கு முன் குவைத் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார். மகனை குவைத்துக்கு அனுப்ப முகமது ஏராளமான கடன் வாங்கியிருந்தார்
தன்னிடம் இருந்த சிறிய அளவு பணத்தை வைத்து கடந்த 8 மாதங்களுக்கு முன் சொந்தமாக ஒருவீட்டை முகமது பாவா கட்டி முடித்தார். ஆனால், வீட்டுக்கு மேல் கடனும் உயர்ந்தது. வங்கிக்கடன், உறவினர்களிடம், நண்பர்களிடம் வாங்கிய கடன் என ரூ.50 லட்சம் வரை பாவாவுக்கு இருந்தது.
கடந்த 8 ஆண்டுகளில் 7.22 லட்சம் அரசுப் பணிக்கு 22 கோடிபேர் விண்ணப்பம்: மத்திய அரசு தகவல்
இதையடுத்து, தான் ஆசையாகக் கட்டிய வீ்ட்டை ரூ.40 லட்சத்துக்கு விற்க பாவா முடிவு செய்தார். இது தொடர்பாக பல்வேறு இடைத்தரகர்களிடமும் பாவா பேசியிருந்தார்.
வீட்டை விற்றபின் வாடகை வீட்டுக்குச் செல்ல வீடும் முகமது பார்த்துவைத்திருந்தார். இதற்கிடையே முகமது பாவாவுக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. இதனால் ஹசனங்கடி பகுதியில் முகமது பாவா ஒரு லாட்டரி வாங்கியிருந்தார். இந்நிலையில் முகமது பாவா வாங்கிய லாட்டரிக்கு கடந்த திங்கள்கிழமை ரூ.ஒரு கோடி பரிசு கிடைத்தது
அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்துவது 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு தகவல்
முகமது பாவா தனது வீட்டை, ரூ.40 லட்சத்துக்கு விலை பேசியிருந்தார். அந்த இடைத் தரகரும் வீட்டை வாங்க வந்திருந்தார். ஆனால், தனக்கு ஜாக்பாக் கிடைத்த செய்தியைக் கூறி வீட்டை விற்கவில்லை என பாவா தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அனைத்து வரிகள் பிடித்தம் போக, முகமது பாவாவுக்கு ரூ.63 லட்சம் கிடைக்கும்.