ED: Enforcement: அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்துவது 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டுவரை அமாலக்கப்பிரிவு ரெய்டு 112 ஆக இருந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்து, 3,010 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

When compared to 2004-14, ED raids increased 27 times between 2014 and 2022: Govt

கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டுவரை அமாலக்கப்பிரிவு ரெய்டு 112 ஆக இருந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்து, 3,010 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிவசேனா கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி அமலாக்கப்பிரிவு ரெய்டு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.அதில் “ அமலாக்கப்பிரிவு ரெய்டு கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 90 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆனால்,புகார்கள் குறைந்துள்ளதே எவ்வாறு” எனக் கேட்டிருந்தார்.

When compared to 2004-14, ED raids increased 27 times between 2014 and 2022: Govt

இதற்கு மத்திய நிதிஅமைச்சகத்தின் இணைஅமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வ பதில் அளித்தார். அவர் கூறியதாவது: 

5ஜி அலைக்கற்றை ஏலம்: முதல்நாளிலேயே ரூ.1.45 லட்சம் கோடி குவிந்தது: அதானி, அம்பானி போட்டி

கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு அமலாக்கப்பிரிவு 112 ரெய்டு மட்டுமே நடத்திய. ஆனால் 2014 முதல் 2022 வரை 3 ஆயிரத்து10 ரெய்டு நடத்தியுள்ளது, இது முந்தைய ஆண்டைவிட 27 மடங்கு அதிகமாகும். 

நிலுவையில் இருக்கும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற சட்டத்தில் பதிவான பழைய வழக்குகளை விரைந்து முடிக்கவும், புதிய வழக்குகளை காலத்துக்குள் விசாரித்து முடிக்கவும் இ்த ரெய்டு நடத்தப்பட்டது. ஏராளமானோர் ஒரு வழக்கில் ஈடுபடும்போது, அங்கெல்லாம் ரெய்டு நடத்துவது அவசியமாகிறது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற சட்டம் கடந்த 2002ம் ஆண்டு இயற்றப்பட்டாலும் 2005ல் நடைமுறைக்குவந்தது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, குறைந்த அளவிலான ரெய்டு நடத்தப்பட்டு ரூ,5,346 கோடி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன, 104 புகார்கள் மட்டுமே வந்திருந்தன. இந்த காலக்கட்டத்தில் விசாரணை நீதிமன்றத்தாலும் யாரும் தண்டிக்கப்படவில்லை, குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை, சொத்துக்கள் முடக்கப்படவில்லை.

When compared to 2004-14, ED raids increased 27 times between 2014 and 2022: Govt

சோனியா காந்தியிடம் 3-வது முறையாக அமலாக்கப்பிரிவு இன்றும் விசாரணை

ஆதலால் கிடப்பில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், புதிய வழக்கு விசாரணையை வேகப்படுத்தவும் ரெய்டு நடத்தப்பட்டது. இதுவரை கடந்த 8 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 10 ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.99,356 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்லன. 888 வழக்குகளில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது, 23 பேர், நிறவனங்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பணமோசடி வழக்குகளில் ஆதாரங்களைச் சேகரிப்பது என்பது மிகவும் முக்கியமானது.

அமலாக்கப்பிரிவு ரெய்டு அதிகரிக்கிறது என்றால், சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்துக்கு எதிராக மத்திய அரசு இருக்கிறது என்று அர்த்தம். சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகிறது.

When compared to 2004-14, ED raids increased 27 times between 2014 and 2022: Govt

அந்நிய செலாவணி பரிமாற்ற மேலாண்மைச் சட்டம்(FEMA) கடந்த 199ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 2004 முதல் 2014 வரை 571 ரெய்டு நடத்தப்பட்டன, 8586 வழக்குகள் உள்ளன, 2,780 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  ரூ.1,754 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

PMLA Judgment: அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சரியானதுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!

கடந்த 2014 முதல் 2022 வரை அந்நியச்செலாவணி பரிமாற்றச்சட்டத்தின் கீழ் 996 ரெய்டுகள் நடத்தப்பட்டு, 5,329  வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ரூ.6376 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, ரூ.7066 கோடி முடக்கப்பட்டுள்ளது.

2022 மார்ச் 31ம் தேதிவரை அமலாக்கப்பிரிவு 992 சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 23 பேர் மீது குற்றம்நிரூபிக்ககப்பட்டுள்ளது.
இவ்வாறு பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios