நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இதில், காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, சரமாரியான கேள்விகளை, மத்திய அரசிடம் கேட்டார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா பேசியதாவது.

சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியவர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும். சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியவர்களின் பெயர் பட்டியல் மத்திய அரசிடம் உள்ளது. அதனை வெளியிட வேண்டும்.

மத்திய அரசு கருப்பு பணத்தை முடக்குவதாக எடுத்துள்ள நடவடிக்கையில் பொதுமக்கள் மட்டுமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

இன்று வங்கிகளின் வாசலில் நிற்பது சாதாரண மக்களே. அவர்களிடம் இருப்பது கருப்பு பணமா? அப்படியானால் அரசு இயந்திரம் கருப்பு பணத்தில் செயல்படுகிறதா?

அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விதை, உரம், பூச்சி கொல்லி மருந்து ஆகியவை அவர்களது சொந்த பணத்தில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்ட 86 சதவீத ரூபாய் நோட்டுகள், கருப்பு பணமா?. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை எதிர்க்க முடியாமலும், பதில் கூற முடியாமல் இருப்பதற்கு ஏன் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.