Asianet News TamilAsianet News Tamil

கலாச்சார பாதை முதல் டிஜிட்டல் இந்தியா வரை: ஜி20 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களைக் கவர்ந்த அம்சங்கள்

ஜி20 உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்தியாவின் விருந்தினர்களாக வரும் தலைவர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதற்காக பாரத் மண்டபத்தில் பல கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Culture Corridor To Digital India: Here's How Bharat Mandapam Sets Up Unique Experience Zones For G20 Guests
Author
First Published Sep 10, 2023, 4:54 PM IST

ஜி20 மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் நாடான இந்தியா, இரண்டு நாள் மெகா நிகழ்வுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து வரும் தலைவர்களை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்தியாவின் விருந்தினர்களான அவர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதற்காக பாரத் மண்டபத்தில் பல கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சிகள் இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் அதே வேளையில் விருந்தினர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கியுள்ளது. டெல்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் 'கலாச்சார பாதை: G20 டிஜிட்டல் மியூசியம்' என்ற தலைப்பில் பிரம்மாண்ட அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பெல்ட் ரோடு திட்டத்துக்கு ஆப்பு; இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் ஜி20-யின் மெகா திட்டம்!

கலாச்சார பாதை:

கலாச்சார பாதை G20 நாடுகள் மற்றும் 9 பிற நாடுகளின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சின்னங்கள் மற்றும் பொருட்களைக் காட்சிப்படுத்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. கூட்டு அடையாளம், அறிவுப் பரிமாற்றம், மற்றும் பல்வேறு கலாச்சார வெளிப்பாடுகளைப் பாராட்டுவதற்கான ஒரு சக்திவாய்ந்த தளமாக கலாச்சார பாதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

டிஜிட்டல் இந்தியா:

'டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம்' என்ற தலைப்பில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகள் குறித்த நேரடி அறிமுகத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கியமான முயற்சிகள் குறித்த அறிமுகத்தை இது அளிக்கும். ஆதார், டிஜி லாக்கர், UPI, இ சஞ்சீவனி, டிக்ஷா, பாஷினி, ONDC மற்றும் Ask GITA ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. MyGov, CoWIN, UMANG, JanDhan, e-NAM, GSTN, FastTag போன்ற அரசின் திட்டங்கள் பற்றியும் விளக்கும் வகையில் இந்த அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி பெவிலியன்:

G20 உச்சிமாநாட்டில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிதிச் சூழலை மாற்றும் திறன் கொண்ட அதிநவீன நிதி கண்டுபிடிப்புகளைக் காட்சிபடுத்தியுள்ளது. இந்திய நிதித்துறையின் தனித்துவமான அம்சங்களைக் காண்பிக்கும் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயம், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, காகிதமில்லா கடன் வழங்கல் தொழில்நுட்பம், UPI One World, Rupay on the Go மற்றும் பாரத் பில் பேமெண்ட்ஸ் ஆகியவை குறித்த விளக்கங்களும் இதில் அடங்குபவை.

ஜி20 உச்சி மாநாட்டில் உக்ரைன் போர் குறித்த முக்கியத் தீர்மானம்! ரஷ்யா, சீனா ஒப்புதலுடன் கூட்டறிக்கை வெளியீடு!

Culture Corridor To Digital India: Here's How Bharat Mandapam Sets Up Unique Experience Zones For G20 Guests

கட்டண முறை அனுபவ மையம்:

UPI One World என்பது இந்தியாவில் வங்கிக் கணக்குகள் இல்லாத வெளிநாட்டுப் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட UPI ஆகும். வெளிநாட்டினர் இந்தியாவில் தங்கியிருக்கும்போது பாதுகாப்பான பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள UPI உடன் இணைக்கப்பட்ட ப்ரீபெய்ட் பேமெண்ட் வசதியைப் பயன்படுத்தலாம்.

கைவினை பஜார்:

ஒரு கைவினைப் பொருட்கள் பஜார் ஒன்றும் பிரகதி மைதானத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பஜார் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்துகிறது. ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் பொருட்களுகுக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விருந்தினர்கள் தங்களுக்கு விருப்பமான உள்நாட்டுத் தயாரிப்புகளை வாங்குவதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

ஜி20 மாநாட்டில் சென்னைக்கு இவ்வளவு முக்கியத்துவமா! கடல்வழி பொருளாதாரத்தில் புதிய திருப்புமுனை!

Follow Us:
Download App:
  • android
  • ios