ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்… டிவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு!!
ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், தன்னை நியமனம் செய்த குடியரசு தலைவருக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், தன்னை நியமனம் செய்த குடியரசு தலைவருக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் இன்று உத்தரவிட்டார். அந்த வகையில் ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தன்னை ஜார்க்கண்ட் ஆளுநராக நியமனம் செய்த குடியரசு தலைவருக்கும் பிரதமர் மோடிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: துருக்கி, சிரியாவை தொடர்ந்து அசாமிலும் நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு!!
இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ஜார்கண்ட் ஆளுநராக என்னைப் போன்ற ஒரு எளிய நபரை நியமித்ததற்காகவும் தேசத்திற்கும் ஜார்கண்ட் மக்களுக்கும் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஜார்கண்ட் மாநிலத்திற்காகவும் தேசத்திற்காகவ்ய்ம் என் மீது காட்டிய நம்பிக்கைக்காகவும் எனது கடைசி மூச்சு வரை சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
இதையும் படிங்க: சாலைத் திட்டங்கள் நாட்டு முன்னேற்றத்தின் தூண்கள்: பிரதமர் மோடி பேச்சு
எப்போதும் என்னை நம்பிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய இணைப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருக்கும், பாஜகவுக்கும் என் சகோதர சகோதரிகளை கொண்ட தமிழக பாஜகவுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த் என்று தெரிவித்துள்ளார். இது எனக்கு கிடைத்த பெருமை அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமான பெருமை என்று பேட்டி ஒன்றில் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.