துருக்கி, சிரியாவை தொடர்ந்து அசாமிலும் நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு!!

அசாமில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாதியுள்ளது. 

Earthquake in Assam registered as 4 on the Richter scale

அசாமில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாதியுள்ளது. முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்ட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் சிரியா பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதை அடுத்து அங்கு மீட்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: இப்போ கன்னடம், அடுத்து தமிழ்.? ஒன்றியத்தின் புது அஸ்திரம் - அரசியல் கிசுகிசு !

இந்த நிலையில் கடந்த 36 மணிநேரத்தில் மட்டும் துருக்கியில் 100க்கு மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நிபுணர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள நாகோன் பகுதியில் இன்று மாலை 4.15 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: சாலைத் திட்டங்கள் நாட்டு முன்னேற்றத்தின் தூண்கள்: பிரதமர் மோடி பேச்சு

இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios