பசு மாட்டிடம் மிதி வாங்கினால் நினைச்சது நடக்குமாம்! தீபாவளிக்கு மறுநாள் நடக்கும் வினோதச் சடங்கு!
கோவர்தன் பூஜை எனப்படும் இந்த நிகழ்வு தீபாவளிக்கு அடுத்த நாளில் நடைபெறுவது வழக்கம். இந்தப் பாரம்பரிய வழிபாட்டில் பசு மாடுகள் பக்தர்கள் மீது ஏறி மிதித்து ஓடுகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரில் ஒரு பாரம்பரிய வழிபாடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. தீபாவளியை ஒட்டி நடைபெறும் இந்தப் பாரம்பரிய வழிபாட்டில் பசு மாடுகள் பக்தர்கள் மீது ஏறி மிதித்து ஓடுகின்றன. இவ்வாறு படுமாடுகளிடம் மிதி வாங்கினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற இந்த வினோதமான வழிபாட்டின் வீடியோ சமூக வலைத்தளங்களின் வெளியாகி வைரலாகியுள்ளது.
கோவர்தன் பூஜை எனப்படும் இந்த நிகழ்வு தீபாவளிக்கு அடுத்த நாளில் நடைபெறுவது வழக்கம். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பிதாத்வாட் கிராமத்தில், ஆண்டுதோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள பங்கேற்கின்றனர்.
மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட மெய்தீ ஆதரவு அமைப்புகளுக்கு தடை: உள்துறை அமைச்சகம் உத்தரவு
இந்தச் சடங்குக்காக ஏராளமான பசுக்கள் வருகின்றன. ஏராளமான பக்தர்கள் பாடிக்கொண்டே குறுக்கே படுத்துக்கொள்கிறார்கள். பசு மாடுகள் விடுவிக்கப்பட்டதும் படுத்துக் கிடக்கும் பக்தர்கள் மீது ஏறி ஓடுகின்றனர். 'தாய் பசு யாருக்கும் தீங்கு செய்யாது' என்பது இந்தச் சடங்கின் பின்னால் உள்ள நம்பிக்கை என்று சொல்கிறார்கள்.
இந்தப் பாரம்பரிய நிகழ்ச்சி பல ஆண்டுகளாக தொடர்கிறது என்று அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிதாத்வாட்டில் நடக்கும் கோவர்தன் பூஜையில் கலந்துகொள்ள ஏராளமான மக்கள் வருகிறார்கள். அவர்கள் இதற்காக ஐந்து நாட்கள் விரதம் இருந்து, கோவிலில் தங்கி, கீர்த்தனைகளைப் பாடி பஜனை செய்கிறார்கள். கடைசி நாளில், மாடுகளிடம் மிதி வாங்கும் நிகழ்வு நடக்கிறது.
இது சூப்பர் கான்செப்ட்... வீல் சேர் வசதியுடன் சூப்பர் ஸ்மார்ட் கார்! ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியம்!