கொரோனா தொற்றை கண்டுபிடிக்க, தற்போது மூக்கு, தொண்டையில் இருந்து சளி மாதிரிகள் குச்சியை விட்டு துடைத்து எடுப்பதால் எரிச்சலும், புண்களும் ஏற்படுகின்றது. இதனை எளிய முறையில் நேரடியாக பரிசோதனை செய்ய புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தற்போது பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்படி, நோயாளியின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. 

இந்த பரிசோதனை முடிவை அறிந்து கொள்ள சுமார் 48 மணி நேரமாகிறது. தனியார் ஆய்வகங் களில் பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  மேலும், தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரிகள் குச்சியை விட்டு துடைத்து எடுப்பதால் எரிச்சலும், புண்களும் ஏற்படுகின்றன. 


 
இந்நிலையில், மிகவும் செலவு குறைவான மற்றும் எளிய முறையில் எச்சில் மூலம் நேரடியாக பரிசோதனை மேற்கொள்ளும் `சலைவா டைரக்ட் என்ற பரிசோதனை முறைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை கடந்த வாரம் ஒப்புதல் அளித்துள்ளது.