Asianet News TamilAsianet News Tamil

இந்தியா தயாரித்த கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசி கெத்து... விலங்குகளிடம் நடந்த பரிசோதனையில் வெற்றி..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மருந்தான கோவேக்ஸினை விலங்குகளுக்கு செலுத்தி நடைபெற்ற பரிசோதனையில் வெற்றி கிடைத்துள்ளது.

Covaxin vaccine victory against animal trail
Author
Delhi, First Published Sep 16, 2020, 7:33 PM IST

கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் கொரோனாவுக்கு 3 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியும் ஒன்று. இந்தத் தடுப்பூசிக்கு முதல் கட்டமாக மனிதர்களிடம் பரிசோதிக்கும் பணிகள் நிறைவு பெற்றது. இரண்டாம் கட்டமாக பரிசோதனைகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

 Covaxin vaccine victory against animal trail
 இந்நிலையில் விலங்குகளுக்கும் கோவேக்ஸின் தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணிகள் நடைபெற்றன. அதன்படி மனிதர்களின் கல்லீரல் செயல்பாடுகளைக் கொண்ட நாய், குரங்கு, தவளை போன்ற விலங்குகளுக்கு கோவேக்ஸின் மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனையில் குரங்குக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வளர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. Covaxin vaccine victory against animal trail
மேலும் குரங்கு நுரையீரல், சுவாச பாதையில் நோய் எதிர்ப்பாற்றல் பெற்றிருப்பதும் பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. இதன் மூலம்  மனிதர்களுக்கு செலுத்தும் முன் விலங்குகளிடம் நடத்தப்படும் தடுப்பூசி பரிசோதனையில் கோவேக்ஸின் வெற்றி பெற்றுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios