நாடெங்கிலும் உள்ள நீதிமன்றங்களின் செயல்பாடுகளை வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மக்கள் நலன் கருதி அனைத்து நீதிமன்ற செயல்பாடுகள் முழுவதும், வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என நவ்நீத் கோஸ்லா என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த மஞ்சுளா செல்லூர், சோனக் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, நீதிமன்ற செயல்பாடுகளை வீடியோ பதிவு செய்வது குடிமகனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கருத முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. அதேநேரம் குறிப்பிட்ட சில வழக்குகளில் தேவையின் அடிப்படையில் நீதிமன்ற செயல்பாடுகளை பதிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.