பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும்: உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!!
வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக அரசியல், சித்தாந்தம் மற்றும் நிதியுதவி அளித்து பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகள் மீது கடுமையான கட்டணம் விதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் நடந்து வரும் 'பயங்கரவாதத்திற்கு நிதியில்லை' என்ற தலைப்பிலான பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாட்டில் பேசினார்.
இந்த மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து அமைச்சர்கள் உள்பட 450 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதேபோன்ற மாநாடு கடந்த 2018ஆம் ஆண்டில் பாரீசிலும், 2019 ஆம் ஆண்டில் மெல்போர்னிலும் நடந்தது. இன்றும், நாளையும், டெல்லியில் தாஜ் ஓட்டலில் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து இருக்கிறது.
இன்று மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:
* பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை மிகவும் முக்கியமானது.
* பயங்கரவாதத்தை வேரோடு அறுப்பதற்கு பெரிய அளவிலான செயலாக்கம் தேவை.
* பயங்கரவாதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து அவர்களது தொடர்புகளை துண்டித்து, நிதி ஆதாரங்களை தடுக்க வேண்டும்.
* பயங்கரவாதம் போன்ற பிரச்சனைகளை நாம் கூட்டாக கையாள வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் எந்த நாட்டிலும் இடம் பெறக்கூடாது.
* பயங்கரவாதிகளுக்கு அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமைப்புகளையும், தனி நபர்களையும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
* பயங்கரவாதத்தை அழிக்கும் விஷயத்தில் 'இருந்தால்', 'ஆனால்' என்ற வார்த்தைகளுக்கே இடமே இல்லை. பயங்கரவாதத்தின் அனைத்து வகையான செயல்களுக்கும் எதிராக உலகம் ஒன்றுபட வேண்டும்.
Saudi Arabia Visa for Indians: சவூதி அரேபியா போகப்போறீங்களா! இனிமேல் போலீ்ஸ் சான்று தேவையில்லை
* தந்திரங்கள், நிதியுதவி இல்லாமல் பயங்கரவாதிகலின் செயல்கள் விரைவில் வலுவிழந்து விடும்.
* போர் இல்லாததால் அமைதி நிலவுகிறது என்று சர்வதேச அமைப்புகள் நினைத்து விடக்கூடாது. பனிப் போர்களும் ஆபத்தானவை மற்றும் வன்முறையானவை. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு ஒரு கட்டணத்தை விதிக்க வேண்டும்.
* இறையாண்மை கொண்ட நாடுகள் தங்களது சொந்த அமைப்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை பயங்கரவாத கூறுகள் தவறாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
Vikram-s Rocket launch:இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ இன்று விண்ணில் பாய்ந்தது!
* சில கும்பல்களுக்கு பயங்கரவாதிகளுடன் ஆழமான தொடர்பு உள்ளது. துப்பாக்கி விற்பனை, போதைப்பொருள் விற்பனை, கடத்தல் ஆகியவற்றில் சம்பாதிக்கும் பணம் பயங்கரவாதத்திற்கு செலவிடப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை மிகவும் முக்கியமானது.
* பயங்கரவாதத்தை வேரோடு அகற்றும் வரை நாடு ஓயாது. பயங்கரவாதத்தின் நீண்டகால தாக்கம் குறிப்பாக ஏழைகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
* அனைத்து பயங்கரவாத தாக்குதல்க;ளுக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும். ஒரே மாதிரியான, ஒருங்கிணைந்த, நடவடிக்கையால் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என்று மோடி பேசினார்.