சீனாவில் இருந்து நாடு திரும்பிய சுமார் 2424 தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ,  இந்தியாவில் இந்த வைரஸ்  தன் வேலையை காட்ட தொடங்கியுள்ளதா என்ற அச்சத்தை இது ஏற்படுத்தி உள்ளது  சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 425 எட்டிப் பிடித்துள்ளது .

 

இந்நிலையில்  நாள் ஒன்றுக்கு குறைந்த து 20 முதல் 50 பேர்வரை சீனாவில் உயிரிழந்து வருகின்றனர்.  இதனால்  சீன மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர் .  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹன் நகரிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார் தற்போது  23 க்கும் அதிகமான நாடுகளை  அச்சத்தில் ஆழ்த்திஉள்ளது.   அமெரிக்கா ,  பிரிட்டன் ,  தாய்லாந்து ,  தைவான் ,  இந்தியா ,  ஜப்பான் உள்ளிட்ட பல  நாடுகளுக்கு குரானா வைரஸ் பரவியுள்ளது.  இதில் அமெரிக்கா ரஷ்யா சீனா போன்ற நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .  இதற்கிடையே தாய்லாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது . நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதால்,   ஹாங்காங் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் சீனாவுக்கான எல்லையை மூடி உள்ளன . 

அதேபோல் சீனாவில் உள்ள வெளிநாட்டவர்கள் வேக வேகமாக வெளியேறி வருகின்றனர் . சீனாவில் இருந்து திரும்பிய 2,424 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.  சீனாவில் இருந்து திரும்பிய 100 பேர் தனி வார்டுகளில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். சீனாவில் இருந்து கேரளம் திரும்பியவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.