Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் காட்டுத் தீயாய் பரவும் கொரோனா... கடும் வேதனையில் பினராயி விஜயன்..!

கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Corona spreading wildfire in Kerala ... pinarayi Vijayan in severe pain
Author
Kerala, First Published Oct 23, 2020, 3:33 PM IST

கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 ஆயிரத்து 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவிய துவக்கத்தில் கேரளாவில்  வைரஸ் தொற்று சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது. கேரளா கொரோனாவைக் கட்டுப்படுத்திய விதம் உலக அளவில் பாராட்டப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக அந்த மாநிலத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்திய அளவில் அதிக தொற்று பரவல் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தற்போது கேரளா உள்ளது.

 Corona spreading wildfire in Kerala ... pinarayi Vijayan in severe pain

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “கொரோனா தொற்று காட்டுத்தீ போல செயல்படுகிறது. காட்டுத்தீ அணைந்து விட்டது போல தோன்றும். ஆனால், திடீரெனெ மீண்டும் வேகமாக கொழுந்து விட்டு எரியும். அதுபோலவே, கொரோனாவும்  வீரியம் கொண்டு செயல்படுகிறது. எனவே, எந்த தளர்வுகளும் இருக்காது. மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.

 Corona spreading wildfire in Kerala ... pinarayi Vijayan in severe pain

கொரோனா பாதிப்பு ஏற்படட்டும் என்ற எண்ணத்தில் மக்கள் சிலர் இருப்பதாக தெரியவருகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் கொரோனா குணம் அடைந்த பிறகும் ஏற்படும் சிக்கல்களை  புறந்தள்ளிவிட முடியாது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களில் ஒரு சதவிதத்தினர் பிந்தைய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.  கொரோனா முடிவுகள் நெகட்டிவ் என வந்த பிறகும் 10 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருப்பது கட்டயம் ஆகும்” என்றார். Corona spreading wildfire in Kerala ... pinarayi Vijayan in severe pain

கேரளாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7 ஆயிரத்து 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.  கேரளாவில் தொற்று பாதிப்புடன் 93,291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios