Asianet News TamilAsianet News Tamil

18 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. இன்று ஒரே நாளில் 18,840 பேர் பாதிப்பு.. இன்றைய நிலவரம்..

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 18,815 ஆக இருந்த நிலையில், இன்று 18,840 ஆக அதிகரித்துள்ளது. 

Corona case Report - 18,840 corona case positive last 24 hrs
Author
India, First Published Jul 9, 2022, 10:26 AM IST

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,840 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 18,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 18,840 ஆக அதிகரித்துள்ள்து. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  4,36,04,394  ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:குறையாத கொரோனா.. இன்று ஒரே நாளில் 18,815 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 16,104 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,29,53,980 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,25,028  ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:தேனியில் ஒரே பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா..! பள்ளியை மூடிய அதிகாரிகள்..அதிர்ச்சியில் பெற்றோர்..

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,25,386 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.29 % ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.51 % ஆக உள்ளது. இந்தியாவில் 198.65 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 12,26,795 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:சென்னையில் 1000க்கும் கீழ் குறைந்தது கொரோனா… இன்று 939 பேருக்கு தொற்று!!

Follow Us:
Download App:
  • android
  • ios