கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முன்னாள் அமைச்சருக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் சாகிய இனாம் (71). இவர் 3 முறை எம்எல்ஏஆகவும், 2 முறை மாநில அமைச்சராகவும் இருந்தார். ராஜஸ்தானில் 3 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் இவர் தான். முன்னாள் அமைச்சரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூசு்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவரது மறைவுக்கு முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.