ஆந்திராவில் போதைக்காக கிருமி நாசினியை தனியாகவும், மதுவில் கலந்து குடித்த 10 பேர் கடும் வயிற்று வலி ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவில் மதுவின் விலையை உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டதையடுத்து மதுகுடிப்போர் கள்ளச்சாராயத்தை நாடி செல்வது அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக பிரகாசம் மாவட்டத்தில் இருக்கும் குறிசொரு சிறு நகரில் வசிக்கும் தொழிலாளர்கள், துப்பரவு பணியாளர்கள், கள்ளச்சாயம் ஆகியவற்றை குடித்து வந்தனர். 

இந்நிலையில், நேற்றிரவு மதுவுடன் கிருமி நாசினியை கலந்து குடித்தொடர் மற்றும் போதைக்காக கிருமி நாசினியை தனியாகவே குடித்தொடர் என மொத்தம் 10க்கும் மேற்பட்டோருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதில், நேற்று மாலை 3 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.